“வரலாற்றை மாற்றியமைப்போம்” – நம்பிக்கையுடன் நிபுன் தனன்ஜய

82

இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் கடந்த கால வரலாற்றை மாற்றியமைக்கும் எண்ணத்துடன் 2020ம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ளதாக இலங்கை அணித் தலைவர் நிபுன் தனன்ஜய தெரிவித்துள்ளார்.

இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு சென்று விளையாடிய இலங்கை அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தது.

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாதம்……………

தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை இளையோர் அணி அதிகம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் U19 உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவர் நிபுன் தனன்ஜய, 

“எமது அணி இறுதியாக 2000ம் ஆண்டு இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. அதன் பின்னர், இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவில்லை. நாம் இங்கு வரலாற்றினை மாற்றுவதற்காக வந்துள்ளோம். 

அணித் தலைவராக எனது அணி தொடர்பில் மகிழ்ச்சியாக உள்ளேன். நாம் அதிகமான பயிற்சிப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே, வரலாற்றை மாற்றுவதற்காக காத்திருக்கிறோம்” 

இலங்கை இளையோர் அணியை பொருத்தவரையில், இதுவரை 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டதில்லை. இம்முறை உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதற்கான ஆயத்தம் தொடர்பில் குறிப்பிடுகையில்,

“இந்திய அணிக்கு எதிரான போட்டி கடினமான சவால். நாம் அதற்கான தயார்படுத்தல்களை செய்துள்ளோம். வீரர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.  காரணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் சம்பியனாகியிருந்தோம். தலைவர் என்ற ரீதியில் அணியின் நம்பிக்கையுடன் முதல் போட்டிக்காக காத்திருக்கிறோம்”

அணித்தலைவர் பதவியிலிருந்து விலக தயாராக இருக்கும் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின்……………..

அதேநேரம், கடந்த உலகக் கிண்ணத் தொடரில் தான் விளையாடிய அனுபத்தை பகிர்ந்துக்கொண்டுள்ள நிபுன் தனன்ஜய, அது தொடர்பிலும் கருத்து வெளியிட்டார். 

“இளையோர் உலகக் கிண்ணம் என்பது கடினமான சவாலாகும். நான் முதன்முறை விளையாடும் போது, அழுத்தத்தை உணர்ந்தேன். இப்போது அனுபவ வீரர் என்ற ரீதியில், எல்லா விடயங்களையும் சிந்திக்காமல், அடுத்த பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மாத்திரம் மனதில் வைத்துக்கொண்டு விளையாட வேண்டும்” என்றார்.

இலங்கை இளையோர் அணி, 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்வரும் 17ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.

கிரிக்கெட்