தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

3115

தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியுடனான ஒரு போட்டியைக் கொண்ட T-20 தொடருக்கான இலங்கை குழாம் இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வளர்ந்துவரும் ஒருநாள் அணித்தலைவராக சந்திமால்

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியுடனான மூன்று……

அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இந்த குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலும் உள்வாங்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் உள்வாங்கப்படாத நிலையிலேயே சந்திமால் T-20 குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.

இறுதியாக, கடந்த வருடம் இந்தியாவுடனான T-20 போட்டியில் விளையாடிய அஞ்செலோ மெதிவ்ஸ், உபாதை காரணமாக தொடர்ந்து இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான T-20 தொடர் மற்றும் சுதந்திரக் கிண்ணத் தொடர் என்பவற்றில் விளையாடவில்லை. குறித்த காலப்பகுதியில் இலங்கை T-20 அணியை தினேஷ் சந்திமால் வழிநடாத்தியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினரால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த 15 பேர் கொண்ட குழாமில் விக்கெட் காப்பு அதிரடித் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல உள்வாங்கப்படவில்லை.

அதேபோன்று, தற்பொழுது தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியுடனான ஒருநாள் தொடருக்கான பெயரிடப்பட்டுள்ள வீரர்கள் சிலரும் இந்த T-20  குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர். எனினும், T-20 போட்டிக்கான முதல் பதினொருவரில் இடம்பெறாத வீரர்கள் இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக விளையாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இலங்கை அணியில் இணைய மாலிங்கவுக்கு வாய்ப்பு

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான….

அதேபோன்று, இலங்கை அணியில் நீண்ட காலம் இணைக்கப்படாமல் இருந்து வருகின்ற வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்த T-20 போட்டிக்கு இலங்கை அணியில் இணைக்கப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எனினும், அவரது பெயர் குழாமில் இணைக்கப்படவில்லை.

இலங்கை குழாம்

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), தினேஷ் சந்திமால், உபுல் தரங்க, திசர பெரேரா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தனன்ஜய டி சில்வா, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக, ஷெஹான் மதுசங்க, லக்ஷான் சந்தகன், அகில தனன்ஜய, ஜெஃப்ரி வெண்டர்செ, பினுர பெர்னாண்டோ, லலிரு குமார

மேலதிக வீரர்கள்

திமுத் கருணாரத்ன, இசுரு உதான, நிரோஷன் திக்வெல்ல, கசுன் ராஜீதா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<