ஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

176
sri-lanka-cricket

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I கிரிக்கெட் தொடருக்கான 16 பேர்கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை 3-0 என வெற்றிக்கொண்ட இலங்கை அணி, எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடருக்காக அங்கு பயணமாகவுள்ளது.  

மாலிங்க ஓய்வு பெற்றால் தசுன் ஷானக்க தலைவராகலாம்

சர்வதேச T20 அரங்கிலிருந்து லசித் மாலிங்க ஓய்வு …..

இந்தநிலையில், அவுஸ்திரேலிய தொடருக்காக செல்லவுள்ள 16 பேர்கொண்ட இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த குழாத்தில், பாகிஸ்தான் தொடரிலிருந்து அதிகமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. 

பாகிஸ்தான் சென்ற இலங்கை T20I குழாத்திலிருந்து நான்கு மாற்றங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. விக்கெட் காப்பாளர்களான சதீர சமரவிக்ரம, மினோத் பானுக, சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க மற்றும் துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ பெரேரா ஆகியோர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி, T20I அணியின் தலைவராக மீண்டும் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அணிக்கு தலைமை தாங்கிய தசுன் ஷான அணியில் இடம்பெற்றிருக்கிறார். இவ்வாறு, லசித் மாலிங்கவுடன், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய நான்கு வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 

ஆஸி. தொடருக்கு இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதில் தலையிடி

பாகிஸ்தானுக்கு எதிரான T20i தொடரில் பானுக ……

பாகிஸ்தானின் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக மேற்குறித்த வீரர்கள் குறித்த தொடருக்கு செல்ல மறுத்திருந்த நிலையில், குசல் மெண்டிஸ் மாத்திரம் உபாதை காரணமாக பாகிஸ்தான் தொடரில் பங்கேற்கவில்லை. எனினும், இப்போது உபாதையிலிருந்து குணமடைந்துள்ள அவர், உடற்தகுதியை நிரூபித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோருக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை T20I  குழாம்

லசித் மாலிங்க (அணித் தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, செஹான் ஜயசூரிய, குசல் பெரேரா, தசுன் ஷானக, ஓசத பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்ல, வனிது ஹசரங்க, பானுக ராஜபக்ஷ, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், கசுன் ராஜித, இசுரு உதான, நுவன் பிரதீப்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<