இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் நான்கு அரைச்சதங்களின் உதவியுடன் 392 ஓட்டங்களை குவித்தது.
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் மெதிவ்ஸ் உட்பட முன்னணி வீரர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு நடைபெறவுள்ள இரண்டு
கொழும்பு என்.சி.சி (NCC) மைதானத்தில் இன்று (30) ஆரம்பமான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் லஹிரு திரிமான்னே முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.
இதன்படி களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, ஆரம்பம் முதல் அதி சிறந்த துடுப்பாட்ட பிரதியினை வெளிப்படுத்தியிருந்தது. முக்கியமாக இன்று துடுப்பெடுத்தாடிய வீரர்களில் நால்வர் அரைச்சதங்களை பெற்றிருந்ததுடன், இருவர் 40 ஓட்டங்களை கடந்திருந்தனர்.
அணித் தலைவர் லஹிரு திரிமான்னே மற்றும் கௌஷால் சில்வா ஜோடி ஆரம்ப விக்கெட்டுக்காக 99 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களும் தங்களுடைய பங்கினை செவ்வனே நிறைவேற்றினர். அணித் தலைவர் லஹிரு திரிமான்னே 45 ஓட்டங்களுடன் பென் ஸ்டோக்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
எனினும், நேர்த்தியாக துடுப்பெடுத்தாடிய கௌஷால் சில்வா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் முறையே 62 மற்றும் 58 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ஏனைய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் ஓய்வறை திரும்பினர். பின்னர் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் 38 பந்துகளில் 45 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். மெதிவ்ஸின் துடுப்பாட்டத்தில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் பெறப்பட்டிருந்தன.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா உள்ளிட்ட ஆறு வீரர்கள்
இதனையடுத்து களம் புகுந்த அஷான் பிரியன்ஜன் நிதானமாக ஆடி 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், அடுத்த வீரர்கள் துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக ஓய்வறை திரும்பினார். பின்னர் துடுப்பெடுத்தாடிய மனோஜ சரச்சந்திர ஆட்டமிழக்காமல் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 56 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பெத்தும் நிசாங்க தனது பங்கிற்கு 29 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி இன்றைய ஆட்டநேர முடிவில் (89.5 ஓவர்கள்) 9 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மொயீன் அலி 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் போட்டியின் இறுதி நாளான நாளை(31), இங்கிலாந்து அணி தங்களது துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
போட்டி சுருக்கம்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















