தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான இரண்டாவது T20I போட்டியில் இலங்கை மகளிர் அணி கடும் போராட்டத்திற்கு பின்னர் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து. இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை தென்னாபிரிக்க மகளிர் அணி 2-0 என கைப்பற்றியது.
தென்னாபிரிக்கா சென்ற இலங்கை மகளிர் முதல் போட்டியில் தோல்வி
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்…
ஜொஹன்னஸ்பேர்க் வொண்டரர்ஸ் அரங்கில் இன்று (03) நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் தென்னாபிரிக்க குழாத்தில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட சுழல் பந்துவீச்சு வீராங்கனை சுனே லுவிஸ் பந்து வீச்சில் மிரட்ட, இலங்கை மகளிர் அணி சவாலான இலக்கை நிர்ணயிக்கத் தவறியது. எனினும், இந்தப் போட்டியில் அபார பந்து வீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணியால் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு இறுதி நேரத்தில் தென்னாபிரிக்க அணியால் பறிக்கப்பட்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதும், மத்திய வரிசையில் சஷிகலா சிறிவர்தன (38) மற்றும் அமல்கா மெண்டிஸ் (12) ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பினர். எனினும், இவர்களின் விக்கெட்டுகள் மூன்று பந்துகள் இடை வெளியில் வீழ்த்தப்பட்ட பின்னர் இலங்கை மகளிர் அணி சறுக்கியிருந்தது. இவர்கள் இருவரையும் தவிர இலங்கை அணிக்காக, தலைவி சமரி அத்தபத்து 20 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக்கொடுத்ததா்.
இதன் அடிப்படையில், இலங்கை மகளிர் அணி 19.4 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தென்னாபிரிக்க அணி சார்பில் சுனே லுவிஸ் 5 விக்கெட்டுகளை பதம் பார்த்தார்.
இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க மகளிர் அணியின் சார்பில், தலைவி டான் வேன் நெய்கர்க் 19 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை விளாசியதோடு, அவர் ஆரம்ப விக்கெட்டுக்காக தஸ்மின் பிரிட்ஸுடன் சேர்ந்து 35 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். எனினும் வேன் நெய்கர்க் ஆட்டமிழந்த பின்னர் தென்னாபிரிக்க மகளிர் அணி தடுமாற்றத்தை சந்திக்க ஆரம்பித்தது.
Video – தெரிவுக்குழுவில் பிழையில்லை, வீரர்கள் முன்னேற வேண்டும் – Cricket Kalam 06
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம்…
அந்த அணி 76 ஓட்டங்களை பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்ததோடு கடைசி ஓவருக்கு 2 விக்கெட்டுகள் மாத்திரமே எஞ்சி இருக்க, எட்டு ஓட்டங்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் பிரபோதனி வீசிய கடைசி ஓவரின் 5 ஆவது பந்தில் நடின் டி கிளர்க் பௌண்டரி ஒன்றை விளாசி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன்மூலம் தென்னாபிரிக்க மகளிர் அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீர, சமரி அத்தபத்து மற்றும் சஷிகலா சிறிவர்தன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்..
போட்டி சுருக்கம்