ஐ.சி.சி. இன் விதிமுறைகளை மீறியதாக சனத் ஜயசூரிய மீது குற்றச்சாட்டு

914

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட தேர்வாளருமான சனத் ஜயசூரிய, ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகளை இரண்டு தடவை மீறி நடந்தார் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

இதன்படி, ஐ.சி.சி சனத் ஜயசூரிய மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் கீழ் வருகின்றன.

“ விதிமுறைகள் சரம் 2.4.6 இன் படி, ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு உரிய வகையில் ஒத்துழையாது போனமை. விசாரணைகளின் ஒரு அங்கமாக ஊழல் தடுப்பு பிரிவு கேட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியமை. “

“ விதிமுறைகள் சரம் 2.4.7 இன்  படி, ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளை தாமதிக்க காரணமாக அமைந்தமை. இதற்குள் ஊழல்களை இனங்காணும் விசாரணைகளுக்கு தேவையாக இருந்த ஆவணங்களை சேதப்படுத்தியது, அதனை மறைத்து வைத்தது, மாற்றியது, அழித்தது போன்றவையும் அடங்கும். “

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களுடன் புதிய உலக சாதனை பதிந்த ஆப்கான் வீரர்

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடரின் போட்டிகள்…

சர்வதேச கிரிக்கெட் பேரவை, இம்மாதம் 03ஆம் திகதி இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெற்றதாக கூறப்பட்ட மிகவும் மோசமான ஊழல்களை விசாரணை செய்து வருவதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டியிருந்தது. சனத் ஜயசூரிய மீது ஐ.சி.சி. இனால் தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் இந்த ஊழல் விசாரணையுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

சனத் ஜயசூரியவுக்கு தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு விளக்கம் தர இன்றைய நாளில் (15) இருந்து இன்னும் இரண்டு வாரங்கள் அவகாசமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணியின் சிரேஷ்ட தேர்வாளராக, சனத் ஜயசூரிய 2016ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ஆம் திகதி வரை செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<