நியுசிலாந்து மண்ணில் பிரகாசித்த குசல் மெண்டில்

1841

நியுசிலாந்து பதினொருவர் மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த பயிற்சிப் போட்டியில் குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்னே, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் நம்பிக்கை மிக்க துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

தனுஷ்க குணதிலக்கவின் அதிரடியுடன் இலங்கை முன்னேற்றம்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு..

நியுசிலாந்தின் நப்பீரில் உள்ள மெக்லன் பார்க்கில் நடைபெற்ற மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமனிலையில் முடிவுக்கு வந்தது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று (10) தங்களது துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, 321 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்திருந்த தனுஷ்க குணதிலக்க 83 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமான்னே 45 ஓட்டங்களுடனும் நேற்றைய தினம் ஆட்டமிழந்திருந்தனர். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட குழாத்தில் இடம்பெறுவதற்கு கட்டாயமாக பிரகாசிக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய குசல் மெண்டிஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.  

இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது, அடுத்த வீரருக்கு துடுப்பாட்ட வாய்ப்பை வழங்கும் முகமாக ஓய்வுபெற்று மைதானத்திலிருந்து வெளியேறினார். இவருக்கு அடுத்தப்படியாக தனன்ஜய டி சில்வா (28), ரோஷேன் சில்வா (27) ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பிளெக் கோபர்ன் மற்றும் பீட்டர் யங்கஸ்பெண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நியூசிலாந்தில் தனியாளாக போராடி சதமடித்த அஞ்செலோ மெதிவ்ஸ்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

இதனையடுத்து 262 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து பதினொருவர் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்மூலம் போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவு செய்யப்பட்டது.

நியுசிலாந்து பதினொருவர் சார்பில் வில்லியம் டொன்னல் 52 ஓட்டங்களையும், டெலி பில்ப்ஸ் 39 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்ததுடன், இலங்கை அணிசார்பில் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, அஞ்செலோ மெதிவ்ஸின் சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றதுடன், நியுசிலாந்து அணி சந்தீப் பட்டேலின் அரைச்சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<