இம்மாதம் ஆரம்பமாகும் விழிப்புலனற்றோருக்கான தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி

57
Blind Cricket

விழிப்புலனற்ற விளையாட்டு வீரர்கள் தேசிய ரீதியில் பங்குபெறும், டில்மா சவால் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஆறாவது தடவையாக ஜூன் மாதம் 3ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.   

.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள்ஒரு கண்ணோட்டம்

இலங்கை நாட்டினை எடுத்து பார்க்கின்றபோது, 1952ஆம் ஆண்டிலேயே முதற்தடவையாக விழிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதாக அறியக் கிடைக்கின்றது. இப்போட்டிகள் அனைத்தும் ரத்மலானையில் காணப்படும் பார்வைப்புலனற்றோருக்கான பாடசாலையை மத்திய நிலைமையாக கொண்டே  நடைபெற்றிருந்தன.

அக்காலத்தில் நடைபெற்றிருந்த பார்வைப்புலனற்றோருக்கான முதல் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் இலங்கையின் முன்னாள் பிரதமர் D.S. சேனநாயக்கா அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ச்சியான முறையில் இவ்வகையான விளையாட்டு அனைவர் மத்தியிலும் பிரபல்யமாகத் தொடங்க, போட்டிகளை நிருவகிக்கும் விதத்தில் 1996ஆம் ஆண்டு தேசிய விழிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் சங்கம், S.L. ஹெட்டியராச்சியினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

விழிப்புலனற்ற வீரர்களுக்கு சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்தினை வழங்கும் பொருட்டு, இவ்வருடம் இந்தியாவின் பெங்களூரில் விழிப்புலனற்றோருக்கான சர்வதேச T-20 கிரிக்கெட் தொடர் முதல்முறையாக நடாத்தப்பட்டிருந்தது. இந்த தொடரில் பங்கேற்றிருந்த இலங்கை அணியானது இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றின் அணிகளை வீழ்த்தி தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை செய்திருந்தது. குறித்த தொடரில் இந்திய அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன், பாகிஸ்தான் இரண்டாம் இடத்தினை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஊடகவியலாளர் சந்திப்பின் புகைப்படங்கள்

இலங்கையில் தேசிய ரீதியில் இடம்பெறும் இந்த தொடருக்கு 2005ஆம் ஆண்டிலிருந்து டில்மா நிறுவனம் அனுசரணை வழங்கி வருகின்றது. இம்முறை இடம்பெறும் தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த டில்மா நிறுவனத்தின் ஸ்தாபகர் மெர்ரில் J. பெர்ணாந்து,

விழிப்புலனற்றோர் கிரிக்கெட் இலங்கையில் வளர்ச்சி அடைந்து வருவது சிறப்பானதே. இது பார்வைப்புலன் இல்லாத வீரர்கள் தங்களது ஆளுமைகளை முழுமையாக வெளிக்காட்ட ஒரு ஊக்குவிப்பாக அமைகின்றது. இன்னும், தேசிய ரீதியிலான தொடர் அவர்களது வலிமையினை வெளிக்கொணர கிடைத்த சந்தர்ப்பமாகும். அதோடு, நாம் அனைவரும் அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளவதற்குரிய உதவிகளை செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளோம். இவ்வாறான நிகழ்வு ஒன்றின் மூலம் அவர்கள் அதனை பெற்றுக்கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்என்றார்.  

கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆவது டில்மா சவால் கிண்ணத் தொடரில் சம்பியன் கிண்ணத்தை ரணவிரு செவன கிரிக்கெட் கழகம்வென்றிருந்தது. கடந்த வருடத்திற்கான தொடரின் போட்டிகள் 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஜுன் மாத காலப்பகுதிகளில் விளையாடப்பட்டிருந்தன. அதில் 12 அணிகள் பங்குபெற்றியிருந்ததோடு, 37 போட்டிகள் இடம்பெற்றன.

கப்டில், வில்லியம்சன் ஆகியோரின் சிறப்பாட்டத்துடன் இலங்கைக்கு அதிர்ச்சியளித்த நியூசிலாந்து

இவ்வருடத்திற்கான டில்மா சவால் கிண்ணத் தொடரில், 6  மாகாணங்களைச் சேர்ந்த 11 அணிகள் பங்குபெறுவதோடு போட்டிகள் அனைத்தும் மொனராகலை மற்றும் கொழும்பு ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறவுள்ளன. இத்தொடரானது விழிப்புலனற்ற வீரர்கள் தங்களது திறமைகளை வெளிக்காண்பித்து தேசிய அணியில் இடம்பிடிக்க அமைந்த ஒரு வாய்ப்பாகவும் அனைவராலும் பார்க்கப்படுகின்றது.  

இம்முறை தொடரில் பங்குபெறும் அணிகள்

 1. ரணவிரு செவன றாகம
 2. சக்தி விளையாட்டுக் கழகம்
 3. சுபர் கிங்ஸ் தங்காலை
 4. ரஜரட்ட ஜயவிரு
 5. விழிப்புலனற்றோருக்கான கவுண்சில்
 6. சிஹ சக்தி விளையாட்டுக் கழகம்
 7. செனஹஸ விளையாட்டுக் கழகம்
 8. யாழ்ப்பாண விளையாட்டுக் கழகம்
 9. சுபக்யா விளையாட்டுக் கழகம்
 10. பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம்
 11. விழிப்புலனற்றோருக்கான பாடசாலை

unnamed