சிரேஷ்ட வீரர்களுக்கான கால்பந்தாட்டத்தில் மாளிகாவத்தை வெட்டரன்ஸ் சம்பியன்

20

இலங்கை மாஸ்டர்ஸ் கால்பந்து சங்கத்தினால் 9ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் மாளிகாவத்தை வெட்டரன்ஸ் கழகம் முதல்தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

மாளிகாவத்தை வெட்டரன்ஸ் கழகம் மற்றும் நடப்புச் சம்பியனான ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும், தமது வயதையும் தாண்டிய அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால், போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியாமல் போனது.

මෙන්ඩිස්ගේ හරි අමුතු විශේෂත්වයක් තියෙනවා – ස්ටීව් රික්සන්

ශ්‍රී ලංකා පන්දු රැකීමේ පුහුණුකරු ස්ටීව් රික්සන්ගේ ……..

இரண்டாவது பாதியில் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த மாளிகாவத்தை வெட்டரன்ஸ் அணி 2 கோல்களை போட்டு அசத்தியது. அந்த அணிக்காக . ப்ரியன்கர பரிமாறிய பந்தை எம்.எப் சில்மி தலையால் முட்டி இந்த இரண்டு கோல்களையும் போட்டமை சிறப்பம்சமாகும்.

இதன்படி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய மாளிகாவத்தை வெட்டரன்ஸ் கழகம், இலங்கை மாஸ்டர்ஸ் கால்பந்தாட்ட சங்க கிண்ணம் மற்றும் நெவில் அபேகுணவர்தன ஞாபாகர்த்த கிண்ணத்தையும் வெற்றி கொண்டது.  

best player
best goal keeper

இலங்கை மாஸ்டர்ஸ் கால்பந்து வீரர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்கின்ற இப்போட்டித் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற மாளிகாவத்தை வெட்டரன்ஸ் கழகத்துக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்பட்டதுடன், வெற்றயீட்டிய வீரர்களுக்கு பதக்கங்களும் கையளிக்கபட்டன.

ஓல்ட் பென்ஸ் கழகம், இதற்குமுன் நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்ததுடன், தொடர்ச்சியாக கடந்த 3 வருடங்களாக அந்த பட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனினும், இம்முறை அந்த அணிக்கு ஏமாற்றம் கிடைத்தது.

பூட்டான் கழகத்திற்கு எதிராக கோல் மழை பொழிந்த கொழும்பு கால்பந்து கழகம்

பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடெட் அணிக்கு எதிரான AFC கிண்ண …

அத்துடன், சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை மாளிகாவத்தை வெட்டரன்ஸ் கழகத்தின் மொஹமட் அஸ்ஹர் பெற்றுக்கொள்ள, சிறந்த வீரருக்காக வழங்கப்படுகின்ற எட்வட் சில்வா விருதை அதே கழகத்தைச் சேர்ந்த எம். துஷாந்த பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இப்போட்டிக்கு முன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிறப்பு கால்பந்தாட்ட போட்டியொன்று நடைபெற்றது. கொழும்பு அணிக்கும், பிற மாவட்ட வீரர்களைக் கொண்ட அணிக்கும் இடையில் நடைபெற்ற இப்போட்டியில் கொழும்பு மாவட்ட அணி வெற்றியீட்டியது.

இலங்கை மாஸ்டர்ஸ் கால்பந்து சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் திலக் பீரிஸின் தலைமையில் இடம்பெற்ற இம்முறை போட்டிகளுக்கு மெக்லெரன்ஸ் கொன்டெய்னர்ஸ் பிறைவட் லிமிட்டெட் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<