மேஜர் ப்ரீமியர் லீக்கில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த பெதும் நிஸ்ஸங்க

266

இம்முறை முதல்தர கழகங்களுக்கிடையிலான மேஜர் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வீரராக NCC கழகத்தின் இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க இடம்பிடித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் ப்மியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இறுதி வாரத்துக்கான நான்கு போட்டிகள் இன்று (07) ஆரம்பமாகின.

இரண்டு இன்னிங்சுகளிலும் இரட்டைச் சதமடித்த அஞ்செலோ பெரேரா

இதில் NCC கழகம் சார்பாக இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மற்றும் அனுபவமிக்க வீரரான மஹேல உடவத்த ஆகியோரும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பாக இளம் துடுப்பாட்ட வீரர்களான தனன்ஜய லக்ஷான் மற்றும் விஷாத் ரந்திக ஆகியோர் சதங்களைப் பெற்று பிரகாசித்திருந்தனர்.


NCC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் மஹேல உடவத்தவினால் சதம் கடந்து ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 146 ஓட்டங்களுடன் கோல்ட்ஸ் கழகத்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் NCC கழகம் வலுவான நிலையில் உள்ளது.

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய NCC கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 376 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டது.

20 வயதுடைய இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க, 119 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் இம்முறை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வீரராக மாறினார்.

கடந்த டிசம்பர் மாதம் இராணுவ கழகத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கன்னி இரட்டைச் சதமடித்து அசத்திய பெதும் நிஸ்ஸங்க, கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான இரண்டாவது உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு இரட்டைச் சதமடித்திருந்தார்.

இம்முறை கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகளில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெதும் நிஸ்ஸங்க, 92.54 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 1018 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 3 அரைச்சதங்களும் உள்ளடங்கும்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 376/6 (90) – மஹேல உடவத்த 146*, பெதும் நிஸ்ஸங்க 119, லஹிரு உதார 35, அஷான் பிரியன்ஜன் 2/44, லஹிரு மதுஷங்க 2/52


கோல்டஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

இளம் துடுப்பாட்ட வீரர்களான தனன்ஜய லக்ஷான் மற்றும் விஷாத் ரந்திக ஆகியோரது சதங்களின் உதவியுடன் இராணுவ கழகத்துக்கு எதிரான போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கொழும்பு, ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 353 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இம்முறை ப்ரீமியர் லீக்கில் முதற்தடவையாக விளையாடி வருகின்ற காலி றிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் வீரரான 20 வயதுடைய தனன்ஜய லக்ஷான், முதல்தரப் போட்டிகளில் தனது கன்னி சதத்தைப் பதிவுசெய்தார்.

இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இந்தப் போட்டியில் 213 பந்துகளுக்கு முகங்கொடுத்து 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பௌண்டரிகளுடன் 141 ஓட்டங்களை அவர் விளாசியிருந்தார். மறுமுனையில் 21 வயதான விஷாத் ரந்திக, 187 பந்துகளில் 106 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 353/4 (90) – தனன்ஞய லக்ஷான் 141, விஷாத் ரந்திக 106, அவிஷ்க பெர்னாண்டோ 75, அசேல குணரத்ன 2/36


SSC கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் அரைச்சதங்களின் உதவியுடன் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக SSC கழகம் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் SSC கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 347 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான சச்சித்ர சேனாநாயக்க ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும், சம்மு அஷான் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, ஆகாஷ் சேனாரத்ன 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 347/7 (91) – சச்சித்ர சேனாநாயக்க 81*, சம்மு அஷhன் 79, ஆகாஷ; சேனாரத்ன 56, நிபுன் தனன்ஞய 46, புலின தரங்க 3/58, சாகர் பரேஷ; 3/122

Photos : Tamil Union v Colts CC – Major Super 8s Tournament 2018/19

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் செரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

NCC கழக மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், இன்றை ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது.

Photo Album – Saracens SC Vs Tamil Union C & AC | Major Super 8s Tournament 2018/19

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் துடுப்பாட்டத்தில் மனோஜ் சரத்சந்திர ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்க்க, சிதார கிம்ஹான் 52 ஓட்டங்களையும், அணித்தலைவர் தரங்க பரனவிதாரண 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 287/6 (90) – மனோஜ் சரத்சந்திர 56*, சிதார கிம்ஹான் 52, தரங்க பரனவிதாரண 50, கமிந்து மெண்டிஸ் 41

சகல போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க