முதல் இன்னிங்ஸ் வெற்றியினை சுவீகரித்த மடவளை மதீனா அணி

245

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையே நடைபெறும் இரண்டு நாட்கள் கிரிக்கெட் தொடரில், மடவளை மதீனா கல்லூரி மற்றும் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரிகள் இடையிலான மோதல் சமநிலை அடைந்திருக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை (14) நாவுல பொது மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில், தமது கடைசி மோதலில் ராஜசிங்க மத்திய கல்லூரியிடம் தோல்வியை தழுவிய மடவளை மதீனா கல்லூரி அணி வெற்றி முடிவு ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியிருந்தது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மதீனா கல்லூரி அணியினர் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி அணியினரை முதலில் துடுப்பாட அழைத்திருந்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாடிய இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி வீரர்கள் மடவளை வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 58 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 100 ஓட்டங்களை மட்டுமே முதல் இன்னிங்ஸில் பெற்றனர்.

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை விஹார ஜனதித் (35) பெற்றிருந்தார்.

இதேநேரம் மடவளை அணியின் பந்துவீச்சு சார்பில் முன்ஸீப் பெளசர் மற்றும் அஜ்மல் ஜவான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருக்க, ஆனந்தராஜா விதுஷன் மற்றும் சஹ்ல் பெளசர் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய மதீனா கல்லூரி அணி, துடுப்பாட்டத்தில் மிகவும் தடுமாற்றத்தை காண்பித்திருந்தது. எனினும், அவ்வணிக்காக போராட்டம் காண்பித்த தரீப் ரில்வான் அரைச்சதம் ஒன்றினை தாண்டி 78 ஓட்டங்களைப் பெற்றார். ரில்வானின் இந்த அரைச்சதத்தோடு மடவளை மதீனா கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 117 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இதேநேரம் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியின் பந்துவீச்சில் இசுரு சம்பத் மற்றும் கீத் சாலங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதன் பின்னர் 17 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி அணி இந்த இன்னிங்ஸில் 142 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் திமிர காசியப்ப 39 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, மதீனா கல்லூரி அணியின் பந்துவீச்சில் சஹ்ல் பெளசர் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

பின்னர் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 126 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடைவதற்காக பதிலுக்கு தம்முடைய இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய மதீனா கல்லூரி அணி 98 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

போட்டி சமநிலை அடைந்த காரணத்தினால் மடவளை மதீனா கல்லூரி அணியினர் முதல் இன்னிங்ஸ் வெற்றியினை சுவீகரித்துக் கொண்டனர்.

மடவளை மதீனா கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அஜ்மல் ஜவான் அதிகபட்சமாக 35 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி வீரர் கல்ப பானுக்க 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்து திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 100 (58) விஹார ஜனதித் 35, முன்ஸிப் பெளசர் 14/3, அஜ்மல் ஜவான் 22/3, சஹ்ல் பெளசர் 13/2, ஆனந்தராஜா விதுர்ஷன் 14/2

மடவளை மதீனா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 119 (37) தரீப் ரில்வான் 78, இசுரு சம்பத் 13/3, கீத் சாலங்க 34/3

இரத்தினபுரிபுனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாம்இன்னிங்ஸ்) – 142 (50.1) திமிரகாசியப்ப 39, சஹ்ல்பெளசர் 42/3

மடவளை மதீனா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 98/8 (43) அஜ்மல் ஜவான் 35, கல்ப பானுக்க 28/4

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (மடவளை மதீனா கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப்