பும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது

பிசிசிஐ விருதுகளில் பும்ராவுக்கு அதிசிறந்த வீரர் விருது

111
Bumrah

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பிசிசிஐ) 2018/19ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனையாக பூனம் யாதவ்வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006-07 ஆண்டுமுதல் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி 2018-19ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று இரவு (12) நடைபெற்றது. இதில் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  

மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா

சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில்…

1983ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீகாந்த், தேர்வுத் குழு தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்

அஞ்சும் ஜோப்ரா, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

இந்த நிலையில், வருடத்தின் சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சிறந்த சர்வதேச வீராங்கனைக்கான விருது சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் தனது முத்திரையை பதித்தார்

2018இல் டெஸ்ட் அறிமுகமாகிய அவர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற சாதனயை தன்வசம் வைத்துள்ளார். இவர் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அவரது அபார பந்துவீச்சால் தான், கடந்த வருடம் அவுஸ்திரேலிய மண்ணில் முதல்தடவையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது

அத்துடன், சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது மயங்க் அகர்வால், சிறந்த அறிமுக வீராங்கனை விருது ஷபாலி வர்மா ஆகியோருக்கு கிடைத்தது

அத்துடன், 2018-19ஆம் சீசனில் டெஸ்ட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரருக்கான சர்தேசாய் விருதை புஜாராவும், அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான விருதை ஜஸ்பிரித் பும்ராவும் தட்டிச் சென்றனர்.

இதேபோல, பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவும், அதிக விக்கெட் கைப்பற்றிய வீராங்கனையாக ஜூலன் கோஸ்வாமியும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  

மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ!

அயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான மேற்கிந்திய..

இந்த நிலையில், ரஞ்சி கிண்ண கிரிக்கெட்டில் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதை சிவம் துபே, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் சிறந்த சகலதுறை வீரராக நிதிஷ் ராணா ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.

அத்துடன், ரஞ்சி கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மிலிந்த் குமாரும், அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரராக அசுதோஷ் அமன்னும் தெரிவாகினர்.  

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் தலைமையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியின் வீராங்கனைகள், உள்ளூர் கழக மட்ட வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், டைகர் பட்டோடி 7ஆவது நினைவு உரையை முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<