விக்கெட் வீழ்த்த தடுமாறும் இலங்கை A அணி

799
1st unofficial Test, Sri Lanka vs West Indies A

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை A அணி விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாற்றம் கண்டது.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடத்துக்கு முன்னேறிய இலங்கை

தமது சொந்த மைதானத்தில் வைத்து இலங்கையுடனான டெஸ்ட் தொடரினை பறிகொடுத்திருக்கும் …

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தனன்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை A அணி அங்கு மூன்று உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் A அணியை எதிர்கொள்கிறது.

இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவின் டிரலவ்னி அரங்கில் நேற்று ஆரம்பமானது. ஆடுகளத்தின் ஈரலிப்பு தன்மை காரணமாக போட்டியை அரை மணி நேரம் தாமதித்தே ஆரம்பிக்கவேண்டி ஏற்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் ஷமர் பிரூக்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய அவ்வணி ஆரம்ப வீரர்களான மொன்ட்சின் ஹொட்ஜ் மற்றும் ஜோன் கெம்பல் இருவரும் முதல் 12 ஓவர்களுக்கு தமது விக்கெட்டுகளை காத்துக் கொண்டனர்.

எனினும் ஹொட்ஜ் சுழற்பந்து வீச்சாளர் மலின்த புஷ்பகுமார வீசிய பந்தில் சிக்கி விக்கெட் காப்பாளர் சதுன் வீரக்கொடியிடம் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளுக்கு 13 ஓட்டங்களையே பெற்றார்.

இந்நிலையில் களமிறங்கிய அணித் தலைவர் பிரூக்ஸினாலும் நின்றுபிடித்து ஆட முடியவில்லை. அவர் 19 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

இந்நிலையில் ஒரு முனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கெம்பல் மூன்றாவது விக்கெட்டுக்கு விஷோல் சிங்குடன் ஜோடி சேர்ந்து 51 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணி 127 ஓட்டங்களை பெற்று ஸ்திரமான நிலையை எட்டியது.

மேற்கிந்திய ஏ அணியின் தலைவராக மீண்டும் ஷமார் புரூக் நியமனம்

இலங்கை ஏ அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட 4 நாள் டெஸ்ட் …

எனினும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் களத்தில் இருந்து நிதானமாக ஆடிய கெம்பல் 108 பந்துகளில் 6 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஷெஹான் ஜயசூரியவின் சுழலுக்கு முகம்கொடுக்க முடியாமல் ஸ்டம்ப் செய்யப்பட்டார்.

எனினும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சிங் தனது விக்கெட்டை காத்துக்கொண்டார். ஐந்தாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் ஜஹ்மார் ஹமில்டனுக்கு தனது விக்கெட்டை காத்துக்கொள்ள முடியவில்லை. 35 பந்துகளுக்கு 6 ஓட்டங்களை பெற்ற அவர் புஷ்பகுமாரவின் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மேற்கிந்திய தீவுகள் A அணியின் மத்தியவரிசை விக்கெட்டுகள் இரண்டும் 18 ஓட்டங்களுக்குள் பறிபோனதால் அந்த அணி 145 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் சிங்குடன் இணைந்த சுனில் அம்ப்ரிஸ் வேகமாக ஆடி ஓட்டங்களை குவித்ததால் அந்த அணியால் 200 ஓட்டங்களை தாண்ட முடிந்தது.

மறுபுறம் இலங்கை அணி சிறப்பு பந்து வீச்சாளர்களுக்கு மேலதிகமாகவும் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி ஆட்டத்தில் திருப்பம் ஏற்படுத்த முயன்றது. இதனால் இலங்கை அணியின் எட்டு வீரர்கள் பந்துவீசினர்.

எனினும் அண்மையில் இந்தியாவுக்கு எதிராக தனது கன்னி டெஸ்டில் ஆடிய மலின்த புஷ்பகுமாரவே எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார். அவர் 19.1 ஓவர்கள் பந்துவீசி 62 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோன்று 16 ஓவர்கள் பந்துவீசிய ஜயசூரிய 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இலங்கையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் …

போதிய வெளிச்சம் இன்மையினால் முதல்நாள் ஆட்டம் குறித்த நேரத்திற்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சுக்கு 76.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதில் விஷோல் சிங் மற்றும் சுனில் அம்ப்ரிஸ் ஜோடி 5 ஆவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 91 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டது.

கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் ஆடி இருக்கும் 23 வயதான அம்ப்ரிஸ் 75 பந்துகளுக்கு 10 பௌண்டரிகளை விளாசி 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார். மறுமுனையில் சிங் 174 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 58 ஓட்டங்களோடு இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர எதிர்பார்த்துள்ளார்.

நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்றாகும்.