பெண்களுக்கான T20 கிரிக்கெட் போட்டிகளில் முப்படைகளுக்கு வெற்றி

292
Women's t20

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பெண்களுக்கான பிரிவு 1 T20 போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. இப்போட்டிகள் கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் மற்றும் வெலிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் போட்டிகளில் இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை அணிகள் வெற்றிபெற்றன.

குழு   A

குழு  B

கடற்படை – A விமானப்படை – A    
விமானப்படை – B இராணுவப்படை – B
இராணுவப்படை – A கடற்படை – B
மாத்தறை கழகம் கோல்ட்ஸ் கழகம்  

 குழு A 

கடற்படை A மற்றும் மாத்தறை கழகத்திற்கு இடையிலான போட்டி

மாத்தறை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பொழுதும் தொடர்ந்து விக்கட்டுகளை இழந்தமையால் அதிக ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் மாத்தறை அணி 8 விக்கட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது. சிறப்பாகப் பந்து வீசிய மதுரி சமுத்திக்கா 3 விக்கட்டுகளைப் பெற இநோக்கா மற்றும் சண்டி விக்ரமசிங்ஹ தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கடற்படை A அணியானது ஹசினி மற்றும் பிரசாந்தினியின் உதவியுடன் 1 விக்கட்டை மட்டும் இழந்து 7.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

மாத்தறை விளையாட்டுக் கழகம் – 72/8 (20) பியுமி வத்சலா 23, மதுரி சமுத்திக்கா 3/19, இநோக்கா ரனவீர 2/12, சண்டி விக்ரமசிங்ஹ 2/12

கடற்படை விளையாட்டுக் கழகம் A – 74/1 (7.3) பிரசாதினி வீரக்கொடி 37, ஹசினி பெரெரா 25, அப்சரா தசுனி 1/31

முடிவு – 9 விக்கட்டுகளால் கடற்படை விளையாட்டுக் கழகம் A அணிக்கு வெற்றி


இராணுவப்படை A  மற்றும் விமானப்படை B இற்கு இடையிலான போட்டி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விமானப்படை B அணியானது முதலில் இராணுவ A அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய, முன்னைய பிரிவு 1 வெற்றியாளர்களான இராணுவ A அணி தமது 20 ஓவர்களையும் முழுமையாகப் பயன்படுத்தி 4 விக்கட்டுகளை மட்டும் இழந்து 127 எனும் மாபெரும் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விமானப்படை B அணியால் இந்தப் பாரிய இலக்கை அடைந்துகொள்வது கடினமாக அமைந்தது. 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் இராணுவ A அணி 28 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

இராணுவ விளையாட்டுக் கழகம் A – 127/4 (20) இமல்கா மெண்டிஸ் 35, நிலுகா கருணாரத்ன 32, நிபுனி ஹன்சிகா 23, சதுரானி குணவர்தன 2/19

விமானப்படை B – 88/9 (20) சதுரானி குணவர்தன 20, செரினா ரவிகுமாரி 3/11, நிலுகா கருணாரத்ன 2/5

முடிவு – 28 ஓட்டங்களால் இராணுவ விளையாட்டுக் கழக A அணிக்கு வெற்றி

 குழு B 

விமானப்படை A மற்றும் கோல்ட்ஸ் கழகத்திற்கு இடையிலான போட்டி

முதலில் விமானப்படைA அணியினர் துடுப்பெடுத்தாடினர். இலங்கை அணிக்காக விளையாடும் 9 வீராங்கனைகளைக் கொண்ட விமானப்படை A அணியினர் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற பின்னர் சிறந்த ஓட்டங்களைப் பெறும் என நினைத்தபோதும் கோல்ட்ஸ் அணியானது விமானப்படை A அணியை 118 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

சிறந்த அணியான விமானப்படை A அணியை வெற்றிகொள்ள 119 ஓட்டங்கள் மாத்திரமே பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய கோல்ட்ஸ் அணியானது வெற்றி பெறும் என நினைத்தபோதும், விமானப்படை A அணியின் பந்து வீச்சை முகம் கொடுக்க முடியாமல் 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் விமானப்படை A அணியானது 48 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.

விமானப்படை A – 118/7 (20) யசோதா மெண்டிஸ் 44, சந்துனி அபேவிக்ரம 29, AD ஜனகாந்திமாலா 3/16

கோல்ட்ஸ் CC – 70/8 (20) அமாஷா அஞ்சலி 19, சம்ஸி அடபத்து 2/5, சமரி பொல்கம்பொல 2/11, ஒஷாதி ரனசிங்ஹ 2/19

முடிவு – 48 ஓட்டங்களால் விமானப்படை A அணிக்கு வெற்றி


கடற்படை B மற்றும் இராணுவ B அணிகளுக்கு இடையிலான போட்டி

வெலிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கடற்படை B அணியானது முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. தான் திட்டமிட்டபடி நடைபெறாமல் கடற்படை B அணி 16.2 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சுருண்டு கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இராணுவ B அணிக்கு ஆரம்பத்தில் கடற்படை B அணி சிறப்பாகப் பந்து வீசி அழுத்தம் கொடுத்தபோதும் நிர்மாலி பெரேரா சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இராணுவ B அணியை 18.3 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைய உதவி செய்தார்.

இதன் மூலம் இராணுவ B அணி 7 விக்கட்டுகளால் இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

கடற்படை B அணி -72 (16.2) சானிகா லிந்தகெதர 27, கணேஷா சமரி 3/16, ஆயெஷா ப்ரபோதினி 2/15

இராணுவப்படை B அணி – 73/3 (18.3) நிமாலி பெரெரா 38, சசினி ஜயவர்தன 1/1

முடிவு – 7 விக்கட்டுகளால் இராணுவ B அணிக்கு வெற்றி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்