வெற்றியை நோக்கி இந்திய அணி

229
WI vs IND Day 3
AP Photo

இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 566 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. 2ஆவது நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் கிரேக் பிராத்வைட் 11 ஓட்டங்களுடனும், நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய பிஷூ ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு இடைவேளை வரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 46 ஓட்டங்களுடனும், சாமுவேல்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதனை அடுத்து, முகமது சமியும், உமேஷ் யாதவும் தங்களது வேகப்பந்துவீச்சின் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டே இருந்தனர். இதனால் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தது.

நீண்ட நேரம் தாக்கு பிடித்து விளையாடிய பிராத்வைட் 74 ஓட்டங்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவின் பந்துவீச்சுக்கு வீழ்ந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டவுரிச் 57 ஓட்டங்களும், ஹோல்டர் 36 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 243 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துfollow on” ஆனது. முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். மிஸ்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியைக் கேட்டுக் கொண்டது. 323 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடங்கியது. 3ஆம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 13 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

முதல் இனிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வைட் 2 ஓட்டங்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். சந்திரிகா(9), டேரன் பிராவோ(10) ஓட்டங்களில் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்னும் 302 ஓட்டங்கள் இந்தியாவை விட பின் தங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது என்பதால், இந்திய அணி வெற்றி பெறுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது.  

போட்டியின் சுருக்கம்

இந்தியா 566/8d

விராத் கோஹ்லி 200, ரவி அஷ்வின் 113, சீகர் தவான் 84, அமித் மிஷ்ரா 53, கிரேக் பரத்வைட் 65/3, தேவேந்திர பிஷோ 163/3

மேற்கிந்திய தீவுகள் 243/10

கிரேக் பரத்வைட் 74, ஷேன் டொவ்ரிச் 57*, ஜேசன் ஹோல்டர் 36, உமேஷ் யாதவ் 41/4, முஹமத் ஷாமி 66/4

மேற்கிந்திய தீவுகள் 21/1 (Follow on)

ராஜேந்திரன் சந்திரிகா 09*, டேரன் பிராவோ 10*, இஷான் ஷர்மா 3/1

மேற்கிந்திய தீவுகள் 302 ஓட்டங்கள் பின்னிலையில்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்