இலங்கை தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

110

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தமது இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கவிருக்கும் 15 பேர் கொண்ட தமது வீரர்கள் குழாத்தினை அறிவித்துள்ளது. 

>>மேற்கிந்திய தீவுகளை T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றிய இலங்கை

இம்மாதம் 10ஆம் திகதி இலங்கை வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி. இன்) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணியுடன் ஆடுகின்றது.

T20 உலகக் கிண்ணத்தினை அடுத்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் வீரர்கள் குழாமே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணிக் குழாத்தில் மிக முக்கிய உள்ளடக்கமாக அறிமுக இடதுகை துடுப்பாட்டவீரர் ஜெரேமி சோலோசானோ அமைகின்றார். இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளின் A கிரிக்கெட் அணிக்காக ஆடியிருக்கும் ஜெரேமி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) ஒழுங்கு செய்த தெரிவுப் போட்டி ஒன்றில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதனை அடுத்து மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றார்.

>>கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இசுரு உதான

கிரைக் ப்ராத்வைட் மூலம் வழிநடாத்தப்படவுள்ள இந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்குழாத்தில் இப்போது T20 உலகக் கிண்ணத்தில் விளையாடிவருகின்ற ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் போன்ற சகலதுறை வீரர்களுடம் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் ஒரு பக்கமிருக்க ஜெர்மைன் பிளக்வூட், ஷாய் ஹோப் மேற்கிந்திய தீவுகள் அணிக்குழாத்தில் முன்னணி துடுப்பாட்டவீரர்களாக காணப்பட, ரஹ்கீம் கோர்ன்வால், ஷனோன் கேப்ரியல் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

>>ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலம்

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வீரர்களுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளதோடு, டெஸ்ட் தொடரின் போட்டிகள் இரண்டும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணிக்குழாம்

கிரைக் ப்ராத்வைட் (அணித்தலைவர்), ஜெர்மைன் பிளக்வூட் (உப தலைவர்), Nkrumah போன்னர், ரொஸ்டன் சேஸ், ரஹ்கீம் கோர்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷனோன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், வீரசம்மி பெர்மோல், கேமர் ரோச், ஜய்டன் சீல்ஸ், ஜெரேமி சோலசானோ, ஜோமல் வொர்ரிகன்

சுற்றுத்தொடர் அட்டவணை

பயிற்சிப் போட்டி – நவம்பர் 14-17

முதல் டெஸ்ட் போட்டி – நவம்பர் 21-25

இரண்டாவது டெஸ்ட் போட்டி – நவம்பர் 29-டிசம்பர் 03

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<