கொவிட்-19 வைரஸினால் தடைப்பட்ட மேற்கிந்திய தீவுகள் – ஆஸி. ஒருநாள் போட்டி

145
AFP

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

ஐசிசி சுப்பர் லீக்கில் மேலும் ஒரு புள்ளியை இழக்கும் இலங்கை

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஆடும்  இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (22) நடைபெறவிருந்த நிலையில், குறித்த போட்டியின் நாணய சுழற்சியும் இடம்பெற்று அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவுஸ்திரேலிய – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் தொடரில் விளையாடாமல் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டு அது கண்டறியப்பட, இரு அணிகளும் பங்கெடுக்கின்ற ஒருநாள் போட்டியானது உடனடியாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆடவுள்ள இலங்கை குழாம் வெளியீடு

அதேநேரம், போட்டி ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இரு அணியினது வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு மீண்டும் அனைவருக்கும் இன்று (23) PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதில் கிடைக்கும் முடிவுகளுக்கு அமைய, மீண்டும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…