இந்திய கிரிக்கெட்டுக்கு அறிவுரை வழங்கும் வசீம் அக்ரம்

Lanka Premier League 2021

234

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், சர்வதேசத்தில் நடைபெறும் ஏனைய கிரிக்கெட் லீக் தொடர்களில் விளையாட வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான பலம் மிக்க இந்திய அணி, நடைபெற்றுமுடிந்த T20 உலகக்கிண்ணத் தொடரில் கிண்ணத்தை வெற்றிக்கொள்ளும் என்ற கணிப்பு சர்வதேச அளவில் காணப்பட்டது.

>>இரண்டு தடவைகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

எனினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட்டுகளால் தோல்வியடைந்ததுடன், நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தோல்வியடைந்தனர். எனவே, அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றாலும், அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தநிலையில், சஹீன் ஷா அப்ரிடியின் முதல் ஓவரில் கிடைத்த அழுத்தம், இந்திய அணியை முற்றுமுழுதாக பின்னடைவுக்கு உட்படுத்தியது என வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதற்கான காரணம் பாகிஸ்தானுடன் அதிகமான போட்டிகளில் இந்திய அணி விளையாடவில்லை என்பதுடன், சர்வதேசத்தில் நடைபெறும் லீக் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாடாமையும் என வசீம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வசீம் அக்ரம், இந்திய வீரர்கள், சர்வதேச வீரர்களுக்கு எதிராக அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. சர்வதேச லீக் போட்டிகளிலும் இவர்கள் விளையாடுவதில்லை. பாகிஸ்தான் அணியுடனும் அதிகமான விளையாடவில்லை. இதனால், சஹீன், ஹரிஷ் ரஹூப் மற்றும் ஹஸன் அலி போன்ற வீரர்களை எதிர்கொண்டதில்லை.

இந்திய வீரர்கள் அனைத்து லீக் தொடர்களிலும் விளையாடவேண்டும் என நான் கூறவில்லை. ஓரிரு லீக் தொடர்களில் விளையாடவேண்டும். அப்போதுதான் வித்தியாசமான ஆடுகளங்கள், பந்துவீச்சாளர்கள், வெவ்வேறு அணிகள் மற்றும் வெவ்வேறு ஆடுகள தன்மைகளில் விளையாடும் அனுபவம் இந்திய வீரர்களுக்கு கிடைக்கும்.

எனவே, இதுதொடர்பில் அவர்கள் சிந்திக்கவேண்டும். வருமானத்திலும், திறமை அடிப்படையிலும் IPL தொடர் முதன்மையான லீக். ஆனால், இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் ஓரிரு தொடர்களிலாவது விளையாடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<