T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்ற வனிந்து

142

சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக வெளியிட்டுள்ள T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இலங்கையின் நட்சத்திர வீரரான வனிந்து ஹஸரங்க முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அந்தவகையில் புதிய T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மொத்தம் 776 புள்ளிகள் பெற்றிருக்கும் வனிந்து ஹஸரங்க  தென்னாபிரிக்க அணியின் மணிக்கட்டு சுழல்வீரரான தப்ரைஸ் சம்ஷியினை பின்தள்ளி முதலிடம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் முதலிடத்தினை இழந்த  தப்ரைஸ் சம்ஷி 770 புள்ளிகளுடன் தற்போது இரண்டாம் இடத்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வனிந்து ஹஸரங்க தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியாக திறமையினை வெளிப்படுத்தியிருப்பதோடு, தொடரில் 14 விக்கெட்டுக்களை கைப்பற்றி, இதுவரை அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக காணப்படுகின்றமை அவர், T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது.

அதோடு வனிந்து ஹஸரங்கவே, இந்த ஆண்டில் T20i போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (34) கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வனிந்து ஹஸரங்க, புதிதாக வெளியிடப்பட்டுள்ள T20i போட்டிகளுக்கான சகலதுறை வீரர்கள் தரவரிசையில் 172 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த T20i சகலதுறைவீரர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி 271 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<