இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
விராட் கோஹ்லி தன்னுடைய உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பு தொடர்பில் பதிவுசெய்துள்ளார்.
>>முக்கோண ஒருநாள் தொடரில் சம்பியனான இந்திய மகளிர்<<
கடந்த சில நாட்களாக விராட் கோஹ்லி ஓய்வுபெறவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த போதும், இன்றைய தினம் (12) உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 14 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோஹ்லி, 210 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 31 அரைச்சதங்கள் அடங்கலாக 9230 ஓட்டங்களை குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக நான்காவது அதிகூடிய ஓட்டங்களை விளாசியுள்ள இவர், நான்காவது அதிக சதங்கள், அதிக போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவர், இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை கொடுத்த தலைவர் மற்றும் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்த தலைவர் என்ற பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<