சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.83 செக்கன்களில் நிறைவுசெய்த மொஹமட் அஷ்ரப் ஆறாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 4X100 அஞ்சலோட்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பையும் அவர்உறுதி செய்து கொண்டார். தனது இந்த அடைவுமட்டம் குறித்து ThePapare.com இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த மொஹமட்அஷ்ரப்.