ரொஷானின் அபார சதத்தால் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முன்னேற்றம்

100

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் இன்று நிறைவடைந்தன.

ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ  

மக்கொனை, சர்ரெய் வில்லேஜ் அரங்கில் நடைபெற்ற போட்டியில் ஜோசப் வாஸ் கல்லூரிக்கு எதிராக ரிச்மண்ட் கல்லூரி ஆதிக்கம் செலுத்தியபோதும் இரண்டு நாள் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. எனினும் ரிச்மண்ட் அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலைக்கான புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ரிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 245 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஜோசப் வாஸ் கல்லூரி 36.2 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்கே சுருண்டது. யொகான் பீரிஸ் (54) அரைச்சதம் ஒன்றை பெற்றார்.

இலங்கை ஒரு நாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள லசித் மாலிங்க

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுடன் நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ThePapare.com ,,,,,,

ரிச்மண்ட் கல்லூரியின் சதுன் மெண்டிஸ் 49 ஓட்டங்களை விட்டுக்கெடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 62 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற ரிச்மண்ட் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து இன்று கடைசி நாள் ஆட்ட நேரம் முடியும்வரை துடுப்பெடுத்தாடியது. அந்த அணி ஆட்ட நேரம் முடியும்போது 62 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது. அதிலும் சுதீர (74) மற்றும் ஆதித்ய சிறிவர்தன (65) ஆகியோர் ஆட்டமிழக்காது அரைச்சதம் பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 245 (69.5) – ஆதித்ய சிறிவர்தன 66, தவீஷ அபிஷேக் (60), தினெத் பெர்னாண்டோ 4/63, கிறிஷான் அப்புஹாமி 3/60

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (முதல் இன்னிங்ஸ்) – 183 (36.2) – யொஹான் பீரிஸ் 54, திலான் பிரதீப்த 39, சதுன் மெண்டிஸ் 3/49

ரிச்மண்ட் கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 266/4 (62) – திலும் சுதீர 74*, ஆதித்ய சிறிவர்தன 65*, ஆகாஷ் கவின்த 60, நிரன்ஜன் ரொட்ரிகோ 3/64

முடிவு: போட்டி சமநிலையில் முடிவுற்றது   

புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

ரொஷான் பெர்னாண்டோவின் அபார சதத்தின் மூலம் புனித அலோசியஸ் கல்லூரிக்கு எதிரான இந்தப் போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று அதற்கான புள்ளிகளை வென்றது.

காலி சர்வதேச அரங்கில் நேற்று ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித அலோசியஸ் கல்லூரி 145 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இந்நிலையில் இன்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 59 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணிக்காக ரொஷான் பெர்னாண்டோ ஆட்டமிக்காது 120 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. கவின் பெரேரா 79 ஓட்டங்களை பெற்றார்.

சாலின்த, அஷேனின் அதிரடி பந்து வீச்சால் புனித ஜோசப் கல்லூரி வெற்றி

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ‘டிவிஷன் – 1’ பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 2 போட்டி இன்று நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 3 போட்டிகள் இன்று ஆரம்பமாயின. றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு கொழும்பு,,,,,,,,

முதல் இன்னிங்ஸில் 101 ஓட்டங்களால் பின்தங்கிய புனித அலோசியஸ் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றபோது ஆட்ட நேரம் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 145 (63.3) – துலக்ஷ துல்மின 31, சதுர பிரபாத் 30*, ரவின்து சுஹர்ஷன 5/41

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 246/7d (59) – ரொஷான் பெர்னாண்டோ 120*, கெவின் பெரேரா 79, நிதுக் மல்சித் 5/67

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 176/8 (64) – நிலுக்ஷ டில்மின 62, கவித டில்ஷான் 51, கவின்து ருஹர்ஷன 3/56, சசின்து மாதவ 5/79

முடிவு: போட்டி சமநிலையில் முடிவுற்றது   

தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் குருகுல கல்லூரி, களனி

தர்மராஜ மற்றும் குருகுல கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. எனினும் முதல் இன்னிங்ஸில் 101 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற குருகுல கல்லூரி அதற்கான புள்ளிகளை வென்றது.

கண்டி, தர்மராஜ கல்லூரி மைதானத்தில் இன்று முடிவுற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய தர்மராஜ கல்லூரி 147 ஓட்டங்களுக்கே சுருண்டது.

Sri Lanka’s narrowest Test win by runs

Sri Lanka’s 21 run win against Pakistan in Abu Dhabi was their narrowest Test win by runs

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த குருகுல அணி சிறப்பாக ஆடி 67.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களை எடுத்தது. பதும் மஹேஷ் 70 ஓட்டங்களை குவித்தார். தர்மராஜ சார்பில் ருக்மல் திசானாயக்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் சோபிக்கத் தவறிய தர்மராஜ கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியது. அந்த அணி இன்று கடைசி நாள் ஆட்ட நேரம் முடியும்போது 72 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்றிருந்தது. துலாஜ் பண்டார ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜா கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 147 (47.2) – யசின்த சமரரத்ன 24, நுவன் சானக்க 4/34, சச்சின்த சமித் 3ஃ08

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்) – 248 (67.5) – பதும் மஹேஷ் 70, தீக்ஷன மலின்த 24, ருக்மால் திசானாயக்க 5/38, உபுல் வர்ணகுலசூரிய 3/68

தர்மராஜா கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 204/6 (72) – துலாஜ் பண்டார 66*, கசுன் குணவர்தன 37, நுவன் சானக்க 3/33

முடிவு: போட்டி சமநிலையில் முடிவுற்றது