சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டாவது அணியாக புனித செபஸ்டியன் கல்லூரி

121

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 17 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – I  பாடசாலை அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் “சிங்கர் கிண்ண” ஒரு நாள் கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி அணி, கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரியை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

இதன்படி புனித தோமியர் கல்லூரி அணிக்கெதிரான வெற்றியுடன், புனித செபஸ்டியன் கல்லூரி அணி சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியுடன் சம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடாத்தும் அணியாகவும் மாறியுள்ளது.

சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1)…

மக்கொன சர்ரேய் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த சிங்கர் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு, காலிறுதிப் போட்டிகளில் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியை தோற்கடித்து புனித செபஸ்டியன் கல்லூரி அணியும், கொழும்பு நாலந்த கல்லூரியை தோற்கடித்து  புனித தோமியர் கல்லூரியும் தெரிவாகியிருந்தன.

தீர்மானமிக்க அரையிறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித செபஸ்டியன் கல்லூரி அணியின் தலைவர் ஜனிஷ்க பெரேரா முதலில் எதிரணி வீரர்களை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி அணி, 48.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே குவித்துக் கொண்டது.

தோமியர் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் ஆடிய  மனிஷ ரூபசிங்க அதிகபட்சமாக 35 ஓட்டங்களை குவிக்க, மொஹமட் இஷாக் மற்றும் டியோன் பெர்னாந்து ஆகியோர் தலா 27 ஓட்டங்கள் வீதம் குவித்திருந்தனர்.

இதேவேளை, புனித செபஸ்டியன் கல்லூரியின் பந்து வீச்சு சார்பாக சஷிக பெரேரா 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அணித்தலைவர் ஜனிஷ்க பெரேரா மற்றும் நதீர பெர்னாந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 144 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பாடிய புனித செபஸ்டியன் கல்லூரி அணிக்கு ஆரம்ப வீரராக வந்த சுகித் பிரசன்ன பெறுமதியான அரைச்சதம் ஒன்றினை விளாசி நம்பிக்கை தந்தார். இதேநேரம், அணித்தலைவர் ஜனிஷ்க பெரேரா துடுப்பாட்டத்தில் அசத்த 41 ஓவர்கள் நிறைவில் புனித செபஸ்டியன் கல்லூரி அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.

செபஸ்டியன் கல்லூரி அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த சுகித் பிரசன்ன 6 பெளண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களைக் குவித்திருந்தோடு, அணித்தலைவர் ஜனிஷ்க பெரேரா ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போனஸ் புள்ளியால் அரையிறுதிக்கு முன்னேறிய புனித செபஸ்தியன் கல்லூரி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வரும் பாடசாலைகளுக்கு இடையிலான…

புனித தோமியர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக டில்மின் ரத்னாயக்க 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த போதிலும் அவரது அணியின் வெற்றிக்கு அதனால் எந்தவித பங்களிப்புக்களையும் செய்ய முடியவில்லை.

ஸ்கோர் விபரம்

Scorecard –









Title





Full Scorecard

S. Thomas' College

143/10

(48.4 overs)

Result

St.Sebastian's College

147/4

(41 overs)

St.Sebastian’s College won by 6 wickets

S. Thomas' College’s Innings

Batting R B
D Rathnayaka b S Perera 1 4
D Fernando c D Jayatunga b T De Silva 27 64
R Fernando c D Fernando b J Perera 0 6
R de Silva lbw by S Perera 2 8
M Isaaq b N Fernando 27 67
K Munasinghe c & b N Fernando 0 6
U Suwaris c D Fernando b S Perera 5 16
S de Mel (runout) 9 18
S Wickramathilaka c B Mendis b S Perera 20 56
M Rupasinghe c N Fernando b J Perera 35 43
R Gunasekara not out 0 3
Extras
17 (12WD , 5LB)
Total
143/10 (48.4 overs)
Fall of Wickets:
1-3 (1.2 ov) – D Rathnayaka 2-5 (2.4 ov) – R Fernando 3-11 (7.1 ov) – R de Silva 4-56 (20.2 ov) – D Fernando 5-59 (21.2 ov) – K Munasinghe 6-76 (25.6 ov) – U Suwaris 7-86 (31.2 ov) – S de Mel 8-86 (31.3 ov) – M Isaaq 9-143 (47.2 ov) – M Rupasinghe 10-143 (48.4 ov) – S Wickramathilaka
Bowling O M R W E
J Perera 8 1 15 2 1.88
S Perera 8.4 1 16 4 1.90
S Fernando 1 0 5 0 5.00
N Fernando 10 0 35 2 3.50
T De Silva 9 0 27 1 3.00
D Fernando 5 0 16 0 3.20
C Mendis 7 0 24 0 3.43

St.Sebastian's College’s Innings

Batting R B
S Rodrigo lbw by S Wickramathilaka 2 2
S Prasanna b D Rathnayaka 60 103
D Jayatunga c DNM b K Munasinghe 18 49
B Mendis b D Rathnayaka 9 30
J Perera not out 38 52
N Fernando not out 6 10
Extras
14 (12WD , 2NB)
Total
147/4 (41 overs)
Fall of Wickets:
1-2 (0.2 ov) – S Rodrigo 2-52 (13.6 ov) – D Jayatunga 3-77 (24.1 ov) – B Mendis 4-128 (36.6 ov) – S Prasanna
Bowling O M R W E
S Wickramathilaka 7 0 39 1 5.57
S de Mel 5 0 15 0 3.00
R Fernando 2 1 6 0 3.00
R Gunasekara 10 3 17 0 1.70
K Munasinghe 7 1 18 1 2.57
U Suwaris 3 2 10 0 3.33
D Rathnayaka 7 0 42 2 6.00







முடிவு – புனித செபஸ்டியன் கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க