இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று!

364

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில், விளையாடுவதற்காக பயிற்சிகளில் ஈடுபட்டுவந்த சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன மற்றும் வேகப் பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகியோரே கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

>> மும்பை, RCB அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிங்க, உதான!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்காக, இலங்கை அணியின் வீரர்கள் கொழும்பில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள குறித்த இரண்டு வீரர்களையும், கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மையங்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள சாமிக கருணாரத்ன மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோருடன் நெருங்கி பழகிய வீரர்கள் மற்றும் அதிகாரிகளை கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

>> அபுதாபி T10 லீக்கில் களமிறங்கும் ‘குட்டி மாலிங்க’

அதுமாத்திரமின்றி, வீரர்கள் தனித்தனி குழுவாக பயிற்சிகளில் ஈடுபடுவதால், அனைத்து வீரர்களும் மேற்குறித்த வீரர்களுடன் தொடர்புப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வீரர்கள், உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் உள்ள நிலையில், அவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<