கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக டிம் சௌத்தி நியமனம்!

14
Tim Southee

இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 2026ஆம் ஆண்டு பருவத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான டிம் சௌத்தி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>ஆஷஷ் முதல் டெஸ்டிலிருந்து வெளியேறும் ஆஸி. பந்துவீச்சாளர்<<

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவ போட்டிகளிலும் 700இற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றிய அனுபவம் கொண்ட டிம் சௌத்தி,  ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காகவும் முன்னர் விளையாடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார்.

இந்த ஆண்டு சர்வதேச போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கியிருந்த செளத்தி, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பந்துவீச்சு ஆலோசகர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் நிலையில், கொல்கத்தா அணியுடன் இணைந்து புது வகையிலான பயிற்சியாளர் அனுபவத்தினை பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. செளத்தியின் நியமனம், 2026 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களின் திறமையை மேம்படுத்தவும், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்கவும் பெரிதும் உதவும் என அணி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<