இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் அபிவிருத்தி ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் பூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
லீசெஸ்டர்சையர் கௌண்டி கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான இவரை நான்கு மாதங்களுக்கு இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம் செய்துள்ளது.
>>மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் வெளியீடு<<
இதில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் உலகக்கிண்ணத் தொடருக்காகவும் இலங்கை மகளிர் தேசிய அணியுடன் இணைந்து இவர் பணியாற்றவுள்ளார்.
இதனை தொடர்ந்து இலங்கை இளையோர் மகளிர் அணி, இலங்கை மகளிர் A அணி மற்றும் அடுத்த ஆண்டு உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை ஆடவர் இளையோர் அணிகளுடன் இணைந்து செயற்படவுள்ளார்.
இவர் இரண்டு கட்டமாக இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து செயற்படவுள்ளார். முதற்கட்டம் இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து நவம்பர் 5ஆம் திகதிவரையும், இரண்டாவது கட்டம் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதிவரையும் பணியாற்றவுள்ளார்.
டேவிட் பூன் இதற்கு முதல் இங்கிலாந்து இளையோர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புப்பட்ட அபிவிருத்தி பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<