நியூசிலாந்து – இலங்கை முதல் டெஸ்ட்டை பார்வையிட அனுமதி இலவசம்

New Zealand tour of Sri Lanka 2024

65
SLvNZ

நியூசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியைப் பார்வையிட டிக்கட்டுக்கள் அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை U19 மகளிர் குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.

அந்தவகையில் அடுத்த புதன்கிழமை (18) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியைப் பார்வையிட பொது மக்களுக்கு டிக்கட்டுக்கள் அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முதல் டெஸ்ட் போட்டியினை டிக்கெட் அனுமதியின்றி பார்வையிட வரும் பொது மக்கள் காலி மைதானத்தின் நுழைவாயில் இலக்கம் 04 வழியாக (Gate No. 04) மைதானத்திற்குள் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பதோடு அது ஞாயிற்றுக்கிழமை (22) தொடரும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<