இலங்கை அணியின் தலைவராக மீண்டும் திசர பெரேரா

817
Thisara Perera

மந்த கதியில் ஓவர்கள் வீசிய குற்றச்சாட்டுக்காக, இலங்கை T20 அணியின் தற்போதைய  தலைவர் தினேஷ் சந்திமால் போட்டித்தடையினைப் பெற்றிருப்பதால், நடைபெற்று வரும் சுதந்திர கிண்ண T-20 தொடரில் இலங்கை விளையாடவுள்ள அடுத்த இரண்டு போட்டிகளிலும் அணியினை வழிநடாத்த சகலதுறை வீரரான திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

[rev_slider LOLC]

சுதந்திர கிண்ணத் தொடரில் போட்டித் தடையைப் பெறும் சந்திமால்

இலங்கை அணித்தலைவரான தினேஷ் சந்திமால்..

கடந்த சனிக்கிழமை (10) சுதந்திரக் கிண்ணத் தொடரில் மூன்றாவது போட்டியாக இடம்பெற்ற மோதலில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தொடரை நடாத்தும் நாடான இலங்கை அணிக்கு  பந்துவீச வழங்கப்பட்ட நேரத்தில் நான்கு ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்தது.

இதனால், போட்டியில் தாமதம் ஏற்படுத்தப்பட்டிருந்தாக ஐ.சி.சி இன் சார்பில் போட்டி மத்தியஸ்தரான கிரிஸ் ப்ரோட் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு ஓவர்கள் தாமதாக வீச இலங்கையை வழிநடாத்திய அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததோடு அவருக்கு இரண்டு போட்டித்தடைப் புள்ளிகள் கிடைத்திருந்தன. இதற்கு மேலதிகமாக இலங்கை வீரர்களுக்கும் போட்டிக் கட்டணத்தில் 60% அபாரதமாக செலுத்த வேண்டி ஏற்பட்டிருந்தது.

இரண்டு போட்டித்தடை புள்ளிகளை பெறும் வீரர் ஒருவர், அடுத்ததாக தனக்கு முதலில் வரும் ஒரு டெஸ்ட் போட்டியில் அல்லது இரண்டு ஒரு நாள் போட்டிகளில் அல்லது இரண்டு T-20 போட்டிகளில் பங்கேற்க முடியாது போகும். அந்தவகையில், இலங்கை அணிக்கு சுதந்திர கிண்ணத் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் விளையாட ஒவ்வொரு T-20 போட்டி எஞ்சியிருக்கின்றது. இந்நிலையில் தற்போது போட்டித்தடையினைப் பெற்றிருக்கும் சந்திமால் குறித்த இரண்டு போட்டிகளிலும் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றார்.

இதன் காரணமாகவே, இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியினை வழிநடாத்தும் பொறுப்பு திசர பெரேராவுக்கு கிடைத்திருக்கின்றது.

சுதந்திர கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் துணைத் தலைவராக வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் இத்தொடரில் இன்னும் எந்தவொரு போட்டியிலும் விளையாடாது இருக்கின்றார். அதோடு லக்மால் 2017 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திலேயே T-20 போட்டியொன்றில் கடைசியாக விளையாடியிருந்தார். இந்த விடயங்களினை கருத்திற்கொண்டே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இரண்டு போட்டிகளிலும் அணியின் தலைவர் பொறுப்பு திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.  

சாதனை வெற்றியுடன் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தொடரின்…

இதன் மூலம் மட்டுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணிக்கு மீண்டும் தலைவர் பொறுப்பினை எடுத்திருக்கும் பெரேரா, கடந்த ஆண்டில் எற்கனவே ஆறு T-20 போட்டிகளில் இலங்கை அணியினை வழிநடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திசர பெரேரா தலைமையிலான இலங்கை அணி குறித்த T-20 போட்டிகள் அனைத்திலும் தோல்வியினையே தழுவியிருந்தது. எனவே, இன்று இந்திய அணியுடன் இடம்பெறும் சுதந்திரக் கிண்ணத் தொடரின் போட்டி திசர பெரேராவுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணிக்கு, அண்மைய நாட்களில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் பங்களிப்பு வழங்கி முக்கிய வீரர்களில் ஒருவராக மாறியிருக்கும் 28 வயதான பெரேரா, இதுவரையில்  இலங்கை அணிக்காக 70 T-20 போட்டிகளில் பங்கேற்று 886 ஓட்டங்களை குவித்திருப்பதோடு 50 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார்.

இதேவேளை தற்போது அணியில் வெற்றிடமாகியிருக்கும் தினேஷ் சந்திமாலின் இடத்தினை சகலதுறை வீரர்களில் ஒருவரான தனஞ்சய டி சில்வா எடுத்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.