T10 இல் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய கசுன் ராஜித, லஹிரு குமார

148

T10 லீக் கிரிக்கெட் தொடரின் ஆறாம் நாளுக்குரிய (22) போட்டிகளுடன், அதன் குழுநிலை மோதல்கள் யாவும் அபுதாபி ஷேக் ஸெயத் மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளன.

டெல்லி புல்ஸ் எதிர் கலந்தர்ஸ் 

டெல்லி புல்ஸ் அணியினை இப்போட்டியில் கலந்தர்ஸ் அணி வீரர்கள் 3 விக்கெட்டுக்களால் தோற்கடித்தனர்.

போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி புல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை குவித்தது. 

குசல் ஜனித் பெரேராவின் போராட்டம் வீண்

T10 லீக் கிரிக்கெட் தொடரின் ஆறாம் நாளில் (21) மூன்று போட்டிகள் நிறைவுக்கு வந்தன…

டெல்லி புல்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் நபி 21 பந்துகளுக்கு  48 ஓட்டங்கள் விளாசி தனது தரப்பில் அதிக ஓட்டங்களை பதிவு செய்தார். 

இதேநேரம் கலந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட லஹிரு குமார, ஜோர்ஜ் கார்டன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை (99) நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கலந்தர்ஸ் அணி 9.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை அடைந்தது.

கலந்தர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய டொம் கோஹ்லர்–கட்மோர் 12 பந்துகளுக்கு 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

இதேநேரம் டெல்லி புல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஸஹீர் கான் மற்றும் வாஹிட் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்த போதிலும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

டெல்லி புல்ஸ் – 98/8 (10) – மொஹமட் நபி 48(21), முஜிபுர் ரஹ்மான் 9/2(2), ஜோர்ஜ் கார்டன் 9/2(2), லஹிரு குமார 26/2(2)

கலந்தர்ஸ் – 104/7 (9.5) – டொம் கோஹ்லர்-கட்மோர் 27(12), ஸஹீர் கான் 18/2(2), வாஹிட் அஹ்மட் 18/2(2)

முடிவு – கலந்தர்ஸ் 3 விக்கெட்டுக்களால் வெற்றி


மராத்தா அரபியன்ஸ் எதிர் பங்ளா டைகர்ஸ் 

மராத்தா அரபியன்ஸ் இப்போட்டியில் பங்ளா டைகர்ஸ் வீரர்களை 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தியது.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட…

போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்ளா டைகர்ஸ் அணி டொம் மூர்ஸின் அதிரடி ஆட்டத்தோடு 10 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக செயற்பட்ட டொம் மூர்ஸ் 26 பந்துகளுக்கு 43 ஓட்டங்களைப் பெற்றார். 

இதேநேரம் மராத்தா அரபியன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அசத்தலாக செயற்பட்ட கசுன் ராஜித மற்றும் டுவைன் ப்ராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 107 ஓட்டங்களை மராத்தா அரபியன்ஸ் அணி 8.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

மராத்தா அரபியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியிருந்த நஜிபுல்லா சத்ரான் 15 பந்துகளுக்கு 36 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பங்ளா டைகர்ஸ் – 106/7(10) – டொம் மூர்ஸ் 43(26)*, கசுன் ராஜித 18/2(2), ட்வேய்ன் ப்ராவோ 24/2(2)

மராத்தா அரபியன்ஸ் – 107/3(8.3) – நஜிபுல்லா சத்ரான் 36(15)* 

முடிவு – மராத்தா அரபியன்ஸ் 7 விக்கெட்டுக்களால் வெற்றி 


டீம் அபுதாபி எதிர் கர்நாடகா டஸ்கர்ஸ்

இப்போட்டியில் டீம் அபுதாபி அணி 34 ஓட்டங்களால் கர்நாடகா டஸ்கர்ஸ் அணியை தோற்கடித்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய டீம் அபுதாபி அணியினர் 10 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்கள் குவித்தனர்.

டீம் அபுதாபி அணியின் துடுப்பாட்டம் சார்பாக இங்கிலாந்து வீரரான லூக் ரைட் அரைச்சதம் விளாசி 30 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றார். 

இதேநேரம் கர்நாடகா டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சில் நதன் ரிம்மிங்டன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 129 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கர்நாடக டஸ்கர்ஸ் அணி 10 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

கர்நாடகா டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த றயன் டன் டொஷேட் 12 பந்துகளுக்கு 32 ஓட்டங்களைப் பெற்று போராட்டம் காண்பித்த போதிலும் அவரது துடுப்பாட்டம் வீணானது.

இதேநேரம் ஹேய்டன் வேல்ஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி டீம் அபுதாபி அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

டீம் அபுதாபி – 128/2 (10) – லூக் ரைட் 57(30)*, மொயின் அலி 35(21), நதன் ரிம்மிங்டன் 20/1(2)

கர்நாடகா டஸ்கர்ஸ் – 94/6 (10) – றயான் டென் டொஷேட் 32(12)*, ஹேய்டன் வேல்ஸ் 15/2(2)

முடிவு – டீம் அபுதாபி 34 ஓட்டங்களால் வெற்றி

அதேநேரம், T10 லீக் கிரிக்கெட் தொடரின் குழுநிலைப் போட்டிகள் யாவும் நிறைவடைந்த நிலையில் மராத்தா அரபியன்ஸ், கலந்தர்ஸ், டெக்கான் கிளேடியேட்டர்ஸ் மற்றும் பங்ளா டைகர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<