LPL வீரர்கள் ஏலத்தில் இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்டவீரர்

13164
Suresh Raina, Chris Lynn among foreign players in LPL auction

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும் சில முக்கிய கிரிக்கெட் வீரர்களின் பெயர் விபரமானது வெளியிடப்பட்டிருக்கின்றது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் எதிர்வரும் புதன்கிழமை (14) கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் இந்த வீரர்கள் ஏலத்தில் இந்தியா உட்பட பல முன்னணி நாடுகளின் வீரர்கள் பங்கெடுக்கவிருக்கின்றனர்.

>> உலகக் கிண்ணம் தொடர்பில் பாகிஸ்தான் எடுத்த அதிரடி தீர்மானம்

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக காணப்பட்ட சுரேஷ் ரெய்னா வீரர்கள் ஏலத்தில் பெயரிடப்பட்டுள்ளதோடு, அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரரான கிறிஸ் லின் உம் ஏலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் முக்கிய வீரராக அமைகின்றார்.

இதேநேரம் தென்னாபிரிக்காவின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்டவீரராக வளர்ந்து வருகின்ற ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன் உம் LPL ஏலத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரரான பென் கட்டிங் உம் ஏலத்தில் இணைந்திருக்கின்றார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர்களாக காணப்படும் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ் மற்றும் தஸ்கின் அஹ்மட் ஆகியோரும் LPL ஏலத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர்களான ஈவின் லூயிஸ், கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரும் ஏலத்தில் உள்வாங்கப்பட்ட முக்கிய வீரர்களாக அமைகின்றனர்.

இவர்கள் தவிர ஏலத்தில் உள்வாங்கப்பட்ட முக்கிய உள்ளடக்கமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான சர்பராஸ் அஹ்மட் காணப்படுகின்றார். சர்பராஸ் உடன் ஆப்கான் அணியின் நம்பிக்கைகுரிய வீரர்களான மொஹமட் நபி மற்றும் நூர் அஹ்மட் ஆகியோரும் ஏலத்தில் காணப்படுகின்றனர்

>> வளர்ந்துவரும் மகளிர் ஆசியக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அதேநேரம் பாபர் அசாம், டேவிட் மில்லர் போன்ற முன்னணி வீரர்கள் LPL ஏலத்திற்கு முன்னதாக அணிகள் மூலம் நேரடி ஒப்பந்தத்தினைப் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

LPL ஏலத்தில் பங்கெடுக்கும் 5 அணிகளும் ஏலத்தில் வீரர்களை கொள்வனவு செய்ய 500000 அமெரிக்க டொலர்களை வைத்திருப்பதோடு, மொத்தமாக 368 வீரர்கள் ஏலத்தின் போது அணிகளின் கொள்வனவிற்காக வரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LPL வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும் முக்கிய வீரர்கள்

  • கிறிஸ் லின் – அவுஸ்திரேலியா
  • ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன் – தென்னாபிரிக்கா
  • நேதன் கூல்டர் நைல் – அவுஸ்திரேலியா
  • பென் கட்டிங் – அவுஸ்திரேலியா
  • நூர் அஹ்மட் – ஆப்கானிஸ்தான்
  • மொஹமட் நபி – ஆப்கானிஸ்தான்
  • ஈவின் லூயிஸ் – மேற்கிந்திய தீவுகள்
  • கார்லோஸ் பிராத்வைட் – மேற்கிந்திய தீவுகள்
  • கொலின் டி கிரான்ட்ஹோமே – நியூசிலாந்து
  • ஜேசன் பெஹ்ட்ரேன்ட்ரோப் – அவுஸ்திரேலியா
  • தஸ்கின் அஹ்மட் – பங்களாதேஷ்
  • மஹ்மதுல்லாஹ் ரியாத் – பங்களாதேஷ்
  • சுரேஷ் ரெய்னா – இந்தியா
  • சர்பராஸ் அஹ்மட் – பாகிஸ்தான்
  • முஷ்பிகுர் ரஹீம் – பங்களாதேஷ்

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<