இரண்டாம் நாள் முடிவில் காலி, தம்புள்ளை அணிகள் வலுவான நிலையில்

1354

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாகாண அணிகளுக்கு இடையிலான ‘சுப்பர்-4’ முதல் தர கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (31) நடைபெற்றது.

கொழும்பு எதிர் காலி

அஷேன் சில்வாவின் அபார இரட்டைச் சதத்தின் மூலம் காலி அணி பெற்ற இமாலய ஓட்டங்களை எட்ட கொழும்பு மாகாண அணி ஸ்திரமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்றுவரும் நான்கு நாட்கள் கொண்ட போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த காலி மாகாணத்திற்கு அஷேன் சில்வா தொடர்ந்து தனது அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

146 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை தொடர்ந்த அவர் இரட்டை சதத்தை கடந்தார். 392 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 16 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 231 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் மூலம் காலி அணி 141 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களை பெற்றது. காலி அணிக்காக அதன் அணித்தலைவர் தசுன் ஷானக்க 95 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

ரொஷேன் சில்வா, தசுன் சானக்கவின் அபாரத்தோடு மீண்ட காலி அணி

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்

இதன்போது கொழும்பு அணிக்காக ஏழு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அனுபவ சுழல் பந்துவீச்சாளர் டில்ருவன் பெரேரா 34 ஓவர்களில் 104 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். கவீஷ்க அஞ்ஜுல மற்றும் லசித் அம்புல்தெனிய தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளின் கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி ஆட்ட நேர முடிவின்போது 104 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆரம்ப வீரர்களான கௌஷால் சில்வா (13) மற்றும் ஷெஹான் ஜயசூரிய (08) முன்கூட்டியே ஆட்டமிழந்தபோதும் தனஞ்சய டி சில்வா அரைச்சதம் பெற்றும் (53) லஹிரு திரிமான்ன 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.  

இரண்டாம் நாள் சுருக்கம்


கண்டி எதிர் தம்புள்ளை

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தம்புள்ளை அணி முதல் இன்னிங்சுக்காக பெற்ற 480 ஓட்டங்களுக்கு கண்டி மாகாணம் சிறப்பாக துடுப்பாடி வருகிறது.

இதில் தம்புள்ளை அணிக்காக SSC அணித்தலைவர் கடைசி வரிசையில் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளை அணி 387 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதன்போது 151 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை தொடர்ந்த அஷான் பிரியஞ்சன் மேலும் 5 ஓட்டங்களை பெற்று அட்டமிழந்தார். இதன்படி முதல்தர போட்டிகளில் தனது 9 ஆவது சதத்தை பெற்ற அவர் 239 பந்துகளில் 18 பௌண்டரிகளுடன் 156 ஓட்டங்களை குவித்தார்.

எனினும் மறுமுனையில் 29 ஓட்டங்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த சச்சித்ர சேனநாயக்க முதல்தர போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். 109 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 105 ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தானுடனான T20 தொடரிலும் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி

இலங்கை மகளிர் அணியுடனான மூன்றாவதும் கடைசியுமான T20 போட்டியிலும் 38 ஓட்டங்களால்

இதன் மூலம் தம்புள்ளை அணி 109.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 480 ஓட்டங்களை பெற்றது. கண்டி அணிக்காக அதன் வேகப்பந்து ஜோடியான லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி 35 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அனுபவ வீரர் தரங்க பரணவிதானவினால் 6 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. எனினும் மறுமுனையில் ஆடிய மஹேல உடவத்த சிறப்பாக துடுப்பாடி 3 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார். 169 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 97 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். சரித் அசலங்க 30 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார்.

எனினும் அணித்தலைவர் நிரோஷன் திக்வெல்ல மற்றும் பிரியமல் பெரேரா இரண்டாவது நாள் நிறைவு வரை களத்தில் இருந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 46 ஓட்டங்களை பெற்றனர். திக்வெல்ல 55 ஓட்டங்களுடனும் பெரேரா 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதன் மூலம் கண்டி அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இரண்டாம் நாள் சுருக்கம்