மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவாரா சுனீல் நரைன்??

55

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை துடுப்பாட்டவீரரான சுனீல் நரைன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆடுவதற்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

35 வயது நிரம்பிய சுனீல் நரைன் கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும் உள்ளூர் T20 லீக்குகளில் தொடர்ந்து ஆடி வந்த அவர் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் மிகவும் அசத்தலாக செயற்பட்டு வருகின்றார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக வரும் சுனீல் நரைன் இறுதியாக தான் விளையாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 49 பந்துகளில் சதம் விளாசியதோடு இம்முறை IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கு எதிராகவும் சிறப்பான துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் IPL தொடரில் பந்துவீச்சிலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே சுனீல் நரைன் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவது தொடர்பிலான எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் நெருங்கி வருவதே இதற்கான பிரதான காரணமாகும்.

IPL போட்டியிலிருந்து விலக தீர்மானித்த கிளேன் மெக்ஸ்வெல்!

அதேவேளை சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீளத்திரும்பும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சுனீல் நரைன் எதிர்காலம் தனக்காக கொண்டிருக்கும் விடயங்கள் தொடர்பில் தான் எதிர்பார்த்திருப்பதாக கூறியிருக்கின்றார்.

இதேவேளை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஆடி வரும் மேற்கிந்திய  தீவுகள் அணியின் தலைவரான ரொவ்மன் பவல் T20 உலகக் கிண்ணத்தில் தனது அணிக்காக சுனீல் நரைன் உட்பட அனுபவம் வாய்ந்த வீரர்களான கீய்ரோன் பொலார்ட், ட்வேய்ன் பிராவோ மற்றும் நிகோலஸ் பூரன் ஆகிய வீரர்களையும் இணைக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<