3.1. ThePapare.com இன் சேவைகள் என்பது உங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகவும், வர்த்தக நோக்கங்கள் இன்றியும் பார்வையிடப்படும் சேவைகளைக் குறிக்கும். இந்த சேவைகள் உங்களைச் சாராத வேறொருவருக்கு கொடுக்கப்படாமல் இருப்பது சிறந்தது. ThePapare.com இன் சந்தாவின் போது உங்களுக்கு நாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட, இன்னொருவருக்கு மாற்றம் செய்ய முடியாத, பிரேத்தியேகமற்ற ThePapare.com இன் சேவையினையும், ThePapare.com இன் உள்ளடக்கங்களை பார்வையிடும் சந்தர்ப்பத்தினையும் வழங்குகின்றோம். மேலே குறிப்பிட்டதற்கு வேறு விதமாக எந்தவொரு உரிமையோ, பெயரோ அல்லது விருப்பங்களோ உங்களுக்கு மாற்றம் செய்யப்படவில்லை. இதோடு, நீங்கள் இந்த சேவைகளை பொதுப்பாவனைகளுக்கு பயன்படுத்தவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கின்றீர்கள்.
3.2. உங்களுக்கு ThePapare.com இன் உள்ளடக்கங்களை நீங்கள் உங்கள் கணக்கினை உருவாக்க பயன்படுத்திய நாட்டில், நாங்கள் எங்களது சேவையினை வழங்கும், அதிகாரம் பெற்ற பூகோள பிரதேசங்களில் இருந்து மாத்திரமே பார்வையிட முடியுமாக இருக்கும். உள்ளடக்கங்கள் வெவ்வேறு பூகோள பிரதேசங்களில் இருப்பது அவ்வப்போது மாற்றம் பெறலாம். இதேநேரம், உள்ளடக்கங்களை பார்வையிட நீங்கள் தெரிவு செய்யும் சாதனங்களின் எண்ணிக்கை, நீங்கள் தெரிவு செய்த சந்தாதிட்டத்தின் அடிப்படையில் மாறுபடும் என்பதோடு அது தொடர்பான விபரங்கள் கணக்குப் பக்கத்தில் குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கும்.
3.3. ThePapare.com இன் சேவைகள், எங்களது உள்ளடக்க நூலகம் என்பன அடிக்கடி மாற்றம் பெறும். இதற்கு மேலதிகமாக, எங்களது சேவைகளின் பல பகுதிகளையும் நாங்கள் அடிக்கடி பரிசோதிப்போம். இதற்குள் எமது இணையத்தளம், பாவனையாளர் முகப்பு (UI), சலுகை விடயங்கள் மற்றும் ThePapare.com இன் உள்ளடக்கங்கள் பெறும் நிலை என்பன அடங்கும்.
3.4. நீங்கள் ThePapare.com இன் சேவைகளை பயன்படுத்த ஒப்புக்கொள்கீன்றிர்கள் என்பதன் மூலம் அதில் உள்ளடங்கும் அனைத்து அம்சங்கள், அதனுடன் தொடர்புபட்ட தொழிற்பாடுகள், அதனுடன் தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அனைத்திற்கும் இணங்குவதாக ஒப்புக்கொள்வதோடு, சேவைகள் அல்லது உள்ளடக்கங்கள் தடைசெய்த விடயங்கள் தொடர்பிலும் ஒழுகி நடக்க ஒத்துக் கொள்கின்றீர்கள். இன்னும், (ThePapare.com இன் சேவைகளை) நீங்கள் கோர்வையாக்கம் செய்யவோ, மீள் உருவாக்கவோ, விநியோகம் செய்யவோ, மாற்றவோ, காட்சிப்படுத்தவோ, செயலாக்கவோ, பதிப்பு செய்யவோ, அதிகாரம் பெறவோ, மாறுபட்ட வேலைகளை உருவாக்கவோ, விற்பனை செய்யவோ, ThePapare.com இல் இருந்து பெறப்பட்ட தவகல்களை அல்லது சேவைகளை பாவனை செய்யவோ (இந்த பயன்பாட்டு விதிமுறைகளுக்கு மாற்றமாக) தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்கள்.
மேலதிகமாக நீங்கள் ThePapare.com இன் சேவைகளுக்கு இருக்கும் உள்ளடக்க பாதுகாப்பில் வேறு திருத்தம் செய்யவோ, நீக்கவோ, மாற்றவோ, செயலிழக்கச் செய்யவோ, மதிப்புக்குறைக்கவோ, தடுக்கவோ தடை செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்கின்றீர்கள். இதற்குள் வேறு யுக்திகளை கையாள்வதும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.
அத்தோடு, நீங்கள் ThePapare.com இன் தொடர்புபட்ட சேவைகளையும், அது தொடர்பான தொடர்பு சாதனங்களுக்கும் இடைஞ்சல் செய்வது, அது தொடர்பான கணினி மென்பொருள், வன்பொருள் என்பவற்றின் தொழில்பாட்டை மட்டுப்படுத்துவது, பதிவேற்றுவது, பதிவுகள் இடுவது. மின்னஞ்சல் செய்வது, வேறு வகையில் அனுப்பவது, இடைஞ்சல்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட பொருட்களை உபயோகம் செய்வது என்பனவும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இதற்குள் கணினி வைரஸ்கள், கணினி குறியீடுகள் (Code), கோப்புக்கள் (Files) மற்றும் கணினி நிகழ்ச்சிதிட்டங்கள் (Progame) என்பனவும் அடங்கும். இந்த சந்தர்ப்பங்களின் போது நாம் உங்களை நீக்கம் செய்யவோ, நீங்கள் எங்களது சேவைகளைப் பாவிப்பதனை தடை செய்யவோ முடியும். நீங்கள் இந்த பயன்பாட்டு விதிமுறைகளை தவறாக உபயோகம் செய்தால் நீங்கள் சட்டவிரோதமாக, மோசடியான முறையில் சேவை உபயோகம் செய்ததாக கணிக்கப்படும்.
3.5 ThePapare.com இன் உள்ளடக்கங்களின் காட்சிப்படுத்தல் தரமானது ஒவ்வொரு சாதனங்களுக்கு ஏற்றாற் போலும் மாற்றம் பெறும். அதோடு, இந்த மாற்றம் நீங்கள் இருக்கும் இடம், உங்களது இணைய சேவையின் தரம் போன்ற வேறு காரணிகள் போன்ற வேறு காரணிகள் மூலமும் இடம்பெறும்.
HD, Ultra HD, HDR போன்றவை கிடைப்பது நீங்கள் பாவனை செய்யும் சாதனத்தின் அடிப்படையிலும், உங்களது இணையதள சேவையின் அடிப்படையிலும் மாற்றம் பெறும். இதேநேரம், எங்களது அனைத்து உள்ளடக்கங்களும் HD, Ultra HD, HDR வடிவங்களில் கிடைக்காது.
நீங்களே அனைத்து இணைய செலவுகளுக்கும் பொறுப்பாவீர்கள். இது தொடர்பிலான மேலதிக விடயங்களைப் பெற உங்களது இணையசேவை வழங்குனருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதேநேரம், ThePapare.com இணை பார்ப்பதற்கு எடுக்கும் நேரம் உங்களது இடம், அப்போது இருக்கும் இணைய வசதி, நீங்கள் பார்க்க தெரிவு செய்துள்ள சாதனத்தின் அமைப்பு என்பவற்றின் அடிப்படையில் மாற்றம் பெறும்.
3.6. கடவுச் சொற்கள் மற்றும் கணக்கின் உரித்துடமை. ThePapare.com இல் கணக்கினை உருவாக்கிய அங்கத்தவரே, தெரிவு செய்த கட்டண முறை மூலம் அறவிடப்படும் கட்டணத்திற்கும் பொறுப்பாக இருப்பார். அதோடு, அவரே ThePapare.com உடன் தொடர்பான கணக்கின் உரித்துடைமையும், ThePapare.com இணை பார்வையிடக் கூடிய சாதனத்தின் மூலம் செய்யக்கூடிய ஏனைய செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக இருப்பார்.
இதோடு, கணக்கின் உரிமையாளர் ThePapare.com உடன் தொடர்புபட்ட சாதனத்தின் அனைத்து தொழிற்பாடுகள் தொடர்பிலும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மேலும், அவர் சேவைகளுடன் தொடர்பான கடவுச் சொற்களையோ அல்லது அது தொடர்பான கட்டண முறைகளையோ யாருடனும் பகிரக் கூடாது. நீங்களே கணக்கு தொடர்பாக எங்களுக்கு வழங்கும் உண்மைத் தன்மை தொடர்பில் பொறுப்புதாரியாக இருக்க வேண்டும். எங்களுக்கு உங்களது கணக்கினை இரத்துச் செய்யும் உரிமை உள்ளது என்பதோடு, ஏதாவது மோசடி நிகழ்வுகளின் போது உங்களை பாதுகாக்க கணக்கினை நிறுத்திவைக்கும் உரிமையும் உண்டு.
3.7. உத்தரவாதங்கள் மற்றும் பொறுப்பு தொடர்பான எல்லைகள். ThePapare.com மூலம் வழங்கப்படும் சேவைகள் முன்னர் குறிப்பிட்டதன் அடிப்படையில் உத்தரவாதம் இன்றியும், நிபந்தனைகள் இன்றியும் வழங்கவும் முடியும். குறிப்பாக எமது சேவைகள் தொடர்ச்சியாகவும், வழுக்கள் இன்றியும் இல்லாமல் இருக்க முடியும். உங்களுக்கு இது தொடர்பில் விஷேடமாக, நேரடியாக, மறைமுகமாக, சேதவிளைவுகள் தொடர்பான நஷ்ட விளைவுகளை கேட்க முடியும். இந்த விதிகள் நீங்கள் இருக்கும் நாடுகளில் உள்ள சட்டதிட்டங்களுக்குள் வரும் நுகர்வோர் உரிமை, நஷ்ட விளைவு அற்ற விடயங்களுக்குள் அடங்காது.