தென்னாபிரிக்க வீரர் முறையற்றவிதத்தில் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு

115
Subrayen reported for suspect action after ODI debut

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான ப்ரேநெலன் சுப்ராயன் முறையற்ற பாணியில் பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

>>இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!<<

கடந்த செவ்வாய்க்கிழமை (19) அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் அறிமுகமான 31 வயது நிரம்பிய ப்ரேநெலன் சுப்ராயனின் பந்துவீச்சுப் பாணியில் சந்தேகம் இருப்பதாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரேநெலன் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் 10 ஓவர்களை வீசியிருந்ததோடு, எதிரணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ட்ராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தென்னாபிரிக்கா இந்தப் போட்டியில் 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ப்ரேநெலன் சுப்ராயன் தற்போது ஐ.சி.சி. இன் அங்கீகாரம் கொண்ட பந்துவீச்சுப் பரிசோதனை நிலையம் ஒன்றில் தனது பந்துவீச்சுப் பாணி குறித்து நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலையில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<