டிவிஷன்-II காலிறுதியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி

171

19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன்-II பாடசாலைகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட (ஒருநாள்) கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி பெற்றிருக்கின்றது.

>> யாழ். மத்தியின் வெற்றியை உறுதிசெய்த அனுசாந்த், கவிதர்ஷன், கஜன்

இந்த நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தாம் இடம்பெற்றிருந்த குழு Z இல் நிலை அடிப்படையில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதுடன், பிரிவு A பாடசாலைகளில் காணப்படும்  இரண்டு சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக கருதப்பட்டு காலிறுதிப் போட்டிகளுக்கான வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் அனுராதபுரம் மத்திய கல்லூரி, களுத்துறை திருச்சிலுவை கல்லூரி, மற்றும் நீர்கொழும்பு புனித பேதுரு கல்லூரி ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்திருந்ததோடு லைசியம் சர்வதேச பாடசாலை மற்றும் களுத்துறை வித்தியாலய அணி என்பவற்றிற்கு எதிராக தோல்வியினை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> யாழ்ப்பாண அணிக்காக ஹெட்ரிக் அரைச்சதமடித்த ஜனித்

இதேநேரம் பிரிவு A பாடசாலை அணிகளில் பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி, கண்டி வித்தியார்த்த கல்லூரி, களுத்துறை திஸ்ஸ மத்திய கல்லூரி, கட்டுனேரிய புனித செபஸ்டியன் கல்லூரி, அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்த கல்லூரி, லைசியம் சர்வதேச பாடசாலை மற்றும் களுத்துறை வித்தியாலய அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<