இலங்கை ஒலிம்பிக் அணிக்கு கொவிட் தடுப்பூசி டிஜிட்டல் அட்டை

Tokyo Olympics - 2020

119

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி டிஜிட்டல் அட்டை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி, இலங்கையில் முதல்தடவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டிஜிட்டல் அட்டையைப் பெறும் முதல் குழுவாக இலங்கை ஒலிம்பிக் அணி இடம்பிடித்துள்ளது. 

ஒலிம்பிக்கில் பங்குபற்றும் இலங்கை வீரர்களுக்கு விசேட கொடுப்பனவு

கொரோனா வைரஸுக்கான இரண்டு தடுப்பூசியகளையும் பெற்ற அனைத்து இலங்கையர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, தடுப்பூசி டிஜிட்டல் அட்டை (Digital Vaccine Card) வழங்கும் வேலைத்திட்டம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

குறித்த டிஜிட்டல் அட்டையில், தடுப்பூசி பெற்ற நபரின் பெயர், வயது, அடையாள அட்டை இலக்கம், தடுப்பூசி வழங்கப்பட்ட திகதி, பெறப்பட்ட தடுப்பூசி வகை, தொகுதி எண் ஆகிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த அட்டையில் உள்ள QR குறியீட்டு இலக்கத்தின் மூலம் உலகின் எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட நபரின் அனைத்து விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி, இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி டிஜிட்டல் அட்டை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இம்முறை ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்குபற்றவுள்ள மில்கா கெஹானியின் முகாமையாளரும், இலங்கை ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் செயலாளருமான கபில ஜீவந்தவுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசி டிஜிட்டல் அட்டை வழங்கிவைக்கபட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் நாமல் ராஜபக் ஆகியோரினால் சுகாதார அமைச்சில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்ற அனைத்து இலங்கையர்களுக்கும், கொவிட் தடுப்பூசி டிஜிட்டல் அட்டைக்கான விண்ணப்பப்படிவம், எதிர்காலத்தில் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் இணைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLCயின் அனுசரணையை புறக்கணித்த தேசிய ஒலிம்பிக் சங்கம்

பொதுமக்களின் அவசியத்தின் அடிப்படையில் குறித்த இலத்திரனியல் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், 011 7966366 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…