வர்த்தக சம்மேளன ஒருநாள் தொடருக்கு நீடிக்கும் இலங்கை கிரிக்கெட்டின் ஆதரவு

12

இலங்கை கிரிக்கெட் சபையானது (SLC) வர்த்தக சம்மேளன கிரிக்கெட் சங்கத்தின் (Mercantile Cricket Association – MCA) 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களுக்கு தொடர்ச்சியாக வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளை வழங்கி தமது ஆதரவினை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அன்ட்ரே ரஸ்ஸல்

அந்தவகையில் 2017ஆம் ஆண்டு முதல் வர்த்தக சம்மேளன 50 ஓவர் தொடருக்காக வெள்ளை நிறக் கிரிக்கெட் பந்துகளை வழங்கி வரும் இலங்கை கிரிக்கெட் சபை இந்த ஆண்டு மொத்தமாக 622 பந்துகளை வழங்கியிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் சபை மூலம் வழங்கப்பட்ட கிரிக்கெட் பந்துகளானது, MCA சுப்பர் பிரீமியர் லீக், MCA பிரீமியர் லீக் மற்றும் MCA ”C” பிரிவு லீக் தொடர் என்பவற்றுக்காக பயன்படுத்தப்படும் என வர்த்தக கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘Grays Cavalier’ என்ற பெயரைக் கொண்ட இந்த வெள்ளை கிரிக்கெட் பந்துகளானது வியாழன் (17) இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பந்துல திசநாயக்க மூலம், வர்த்தக கிரிக்கெட் சம்மேளன தலைவர் மகேஷ் டி அல்விஸிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<