கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி மழை காரணமாக வெற்றித் தோல்வியின்றி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து T20 போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை வந்திருந்தது. இதன் ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என கைப்பற்றியிருந்தது. பின்னர் ஆரம்பமாகிய T20 தொடரின் முதல் போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்று, 1-0 என முன்னிலைப்பெற்றது.
போராட்டத்தின் பின்னர் இலங்கை மகளிர் அணியை வீழ்த்திய இந்தியா
கட்டுநாயக்கவில் உள்ள சிலாபம் மேரியன் …
இவ்வாறான நிலையில், இலங்கை மற்றும் இந்திய அணிகள் தங்களுடைய இரண்டாவது போட்டியில் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 7.5 ஓவர்கள் நிறைவில் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது மழை குறுக்கிட்டது. இலங்கை அணிசார்பில் முதல் T20 போட்டியில் அதிரடியாக ஆடிய யசோதா மெண்டிஸ் ஒரு ஓட்டத்துடனும், டில்ஹாரி 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்ததுடன், அணித் தலைவி சமரி அதபத்து 16 பந்துகளுக்கு 21 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.
எனினும், மழை குறுக்கிட்ட தருணத்தில் டிலானி மனோதர 15 ஓட்டங்களுடனும், ஏசானி லொகுசூரியகே ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். எனினும், தொடர்ந்தும் போட்டியில் மழை குறுக்கிட்டு வந்ததால் வெற்றித் தோல்வியின்றி ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.
போட்டி சுருக்கம்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…