இந்திய மகளிர் அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மயிரிழையில் தோல்வியடைந்த இலங்கை அணி, ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான தங்களது முதல் வெற்றியையும் தவறவிட்டது.
இந்திய மகளிர் அணி நிர்ணயித்திருந்த 220 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 11 பந்துகள் எஞ்சியிருக்க 213 ஓட்டங்களை பெற்று, 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
Asia Cup එකේ ලකුණු අතරට එන්න පුලුවන් වෙයි – කුසල් මෙන්ඩිස්
දකුණත් පිතිකරු කුසල් මෙන්ඩිස් සහභාගී වන මංගල ආසියානු කුසලානය සඳහා ඔහු ඊයේ (11) දිවයිනෙන් පිටත්ව ගියේය. ප්රථම වරට ආසියානු කුසලානයක් ක්රීඩා කිරීම පිළිබඳව මෙන්ම අත්දැකීම් බහුල ක්රීඩකයින් මෙවර සංචිතය නියෝජනය කිරීම ගැන කුසල් ThePapare.com වෙත මෙසේ අදහස් දැක්වූවා.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை கொடுத்தனர்.
முதல் போட்டியில் அரைச்சதம் விளாசிய ஸ்ம்ரிட் மந்தனா 14 ஓட்டங்களுடனும், பூனம் ரவூட் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும், அடுத்துவந்த அணித் தலைவி மிதாலி ராஜ் மற்றும் தனியா பஹடியா ஆகியோர் இந்திய மகளிர் அணிக்காக ஓட்டங்களை குவித்தனர்.
தனது முதல் கன்னி அரைச்சதத்தை கடந்த தனியா பஹடியா 66 பந்துகளுக்கு 68 ஓட்டங்களை பெற்றதுடன், மிதாலி ராஜ் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களுக்கு அடுத்தப்படியாக தயாளன் ஹேமலதா 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் சமரி அதபத்து 3 விக்கெட்டுகளையும், உதேசிகா பிரபோதனி மற்றும் சிரிபாலி வீரகொடி தலா 2 விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர்.
பின்னர், 220 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வெற்றியிலக்கை நெருங்கிய போதும், துரதிஷ்டவசமாக விக்கெட்டுகளை பறிகொடுத்து, 48.1 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது, 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
ஆசிய கிண்ண குழாத்திலிருந்து வெளியேறும் தனுஷ்க குணதிலக
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள
இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி சமரி அதபத்து 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், சஷிகலா சிறிவர்தன 49 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்து, அரைச்சதத்தை தவறவிட்டார். இறுதியில் அணியை வெற்றியின் நுணிக்கு கொண்டு சென்ற நிலக்ஷி டி சில்வா 19 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை விளாசி, ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் மன்சி ஜோசி 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்றார். பந்துகள் கைவசமிருந்தும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை மகளிர் அணி ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக தங்களது 8வது தோல்வியை இன்று சந்தித்துள்ளது.
இதேவேளை இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளை பெற்று, பாகிஸ்தானுடன் புள்ளிகளை சமப்படுத்தியுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
போட்டி சுருக்கம்




















