Home Tamil பாகிஸ்தானிடம் 2-0 என T20I தொடரை இழந்த இலங்கை மகளிர் அணி

பாகிஸ்தானிடம் 2-0 என T20I தொடரை இழந்த இலங்கை மகளிர் அணி

Sri Lanka Women’s Tour of Pakistan 2022

122

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில், பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

கராச்சியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணிக்கு எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பம் கிடைக்கவில்லை.

>>முதல் T20I போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி

முதல் போட்டியை போன்று அணியில் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீராங்கனையான சமரி அதபத்து 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க,  ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் ஓட்டங்களை பெற்றாலும் குறைந்த ஓட்டவேகத்துடன் மாத்திரமே ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான ஹாஷினி பெரேரா 35 ஓட்டங்களை பெற்றாலும் 51 பந்துகளுக்கு முகங்கொடுத்திருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக நிலக்ஷி டி சில்வா 21 ஓட்டங்களையும், ஹர்ஷிதா மாதவி 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் மகளிர் அணியின் பந்துவீச்சை பொருத்தவரையில் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை துபா ஹஸன் கைப்பற்றினார்.

பின்னர் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி  முதல் போட்டியை போன்று முதல் 10 ஓவர்களில் தடுமாறியது. முதல் 3 விக்கெட்டுகளும் 34 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

எனினும் ஆயிஷா நஸீம் மற்றும் அணித்தலைவி பிஸ்மா மரூப் ஆகியோர் மிகச்சிறப்பாக ஆடி இறுதிவரை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடினர். அதன்படி வெறும் 17.1 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் மகளிர் அணி 3விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 104 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதிசெய்தது.

ஆயிஷா நஸீம் 31 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பிஸ்மா மரூப் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் அச்சினி குலசூரிய 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

இதேவேளை மூன்று போட்டிகள் கொண்ட இந்த T20I தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் மகளிர் அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளதுடன், மூன்றாவதும் இறுதியுமான T20I போட்டி நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

இலங்கை மகளிர் அணி – 102/6 (20), ஹாஷினி பெரேரா 35, நிலக்ஷி டி சில்வா 21, துபா ஹஸன் 13/1

பாகிஸ்தான் மகளிர் அணி -104/3 (17.1), ஆயிஷா நஸீம் 45*, பிஸ்மா மரூப் 22*, அச்சினி குலசூரிய 11/1

முடிவு – பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


Sri Lanka Women
102/6 (20)

Pakistan Women
104/3 (17.1)

Batsmen R B 4s 6s SR
Hasini Perera c Fatima Sana b Tuba Hassan 35 51 3 0 68.63
Chamari Athapaththu c Aliya Riaz b Anam Amin 5 6 1 0 83.33
Oshadi Ranasinghe c Anam Amin b Nida Dar 8 11 0 0 72.73
Nilakshi de Silva c Bismah Maroof b Aiman Anwer 21 29 0 0 72.41
Harshitha Madavi c Iram Javed b Fatima Sana 16 15 2 0 106.67
Ama Kanchana run out (Nida Dar) 5 2 1 0 250.00
Kavisha Dilhari not out 4 4 0 0 100.00
Anushka Sanjeewani not out 1 1 0 0 100.00


Extras 7 (b 2 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 102/6 (20 Overs, RR: 5.1)
Bowling O M R W Econ
Anam Amin 4 0 16 1 4.00
Fatima Sana 4 1 21 1 5.25
Nida Dar 4 0 20 1 5.00
Aiman Anwer 4 0 28 1 7.00
Tuba Hassan 4 0 13 1 3.25


Batsmen R B 4s 6s SR
Muneeba Ali c Oshadi Ranasinghe b Inoka Ranaweera 17 23 2 0 73.91
Gull Feroza c Nilakshi de Silva b Achini Kulasuriya 3 4 0 0 75.00
Iram Javed c Harshitha Madavi b Oshadi Ranasinghe 11 16 1 0 68.75
Bismah Maroof not out 22 29 1 0 75.86
Ayesha Nasem not out 45 31 5 1 145.16


Extras 6 (b 3 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 104/3 (17.1 Overs, RR: 6.06)
Bowling O M R W Econ
Sugandika Kumari 4 0 19 0 4.75
Achini Kulasuriya 2 0 11 1 5.50
Oshadi Ranasinghe 3.1 0 16 1 5.16
Inoka Ranaweera 4 0 23 1 5.75
Kavisha Dilhari 3 0 20 0 6.67
Ama Kanchana 1 0 12 0 12.00