இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலை மோதலில், இங்கிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
2026 ஐ.பி.எல். தொடர் வீரர்கள் ஏலம் டிசம்பரில்?
இலங்கை மகளிர் அணியானது இங்கிலாந்துடன் மோதியிருந்த போட்டியானது, முன்னதாக ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீராங்கனைகள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தனர். இலங்கை மகளிர் அணி இந்த தொடரில் தாம் விளையாடியிருந்த முதல் போட்டியில் தோல்வியினை தழுவிய நிலையில், தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்து களமிறங்கியது.
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் சிறிது தடுமாறிய போதும், அணித்தலைவி நேட் ஸ்கைவர்-பிரன்ட் அபார சதம் விளாசினார். இதனால் இங்கிலாந்து மகளிர் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்கள் பெற்றனர்.
இங்கிலாந்து தரப்பில் அதன் தலைவி நேட் ஸ்கைவர்-பிரன்ட் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 117 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் இனோக்கா ரணவீர 3 விக்கெட்டுக்கள் வீதமும், சுகந்திகா குமாரி மற்றும் உதேசிகா ப்ரோபதினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 254 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை வீராங்கனைகள் சிறந்த தொடக்கம் பெற்ற போதும் இரண்டாவது விக்கெட்டினை அடுத்து தடுமாறத் தொடங்கியதோடு 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே பெற்றனர்.
11 வருட இடைவெளிக்குப் பிறகு பிக் பேஷ் லீக்கில் மீண்டும் ஸ்டார்க்
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்ச ஓட்டங்களை ஹாசினி பெரேரா 35 ஓட்டங்களுடன் பதிவு செய்தார். இங்கிலாந்து தரப்பின் பந்துவீச்சில் ஷோபி எக்லஸ்டோன் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க ஷார்லேட் டீன் மற்றும் நேட் ஸ்கைவர்-பிரன்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகியாக இங்கிலாந்து தலைவியான நேட் ஸ்கைவர்-பிரன்ட் தெரிவானார்.
இப்போட்டியுடன் இந்த மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது தோல்வியினைப் பதிவு செய்துள்ள இலங்கை தொடரில் தமது அடுத்த மோதலில், செவ்வாய்க்கிழமை (12) நியூசிலாந்தினை எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Amy Jones | run out () | 11 | 13 | 1 | 0 | 84.62 |
Tammy Beaumont | c Harshitha Samarawickrama b Sugandika Kumari | 32 | 29 | 6 | 0 | 110.34 |
Heather Knight | c Dewmi Vihanga b Inoka Ranaweera | 29 | 47 | 2 | 0 | 61.70 |
Nat Sciver | c Nilakshika Silva b Udeshika Prabodhani | 117 | 117 | 9 | 2 | 100.00 |
Sophia Dunkley | c & b Kavisha Dilhari | 18 | 30 | 0 | 0 | 60.00 |
Emma Lamb | b Inoka Ranaweera | 13 | 13 | 2 | 0 | 100.00 |
Alice Capsey | st Anushka Sanjeewani b Inoka Ranaweera | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Charlie Dean | c Dewmi Vihanga b Udeshika Prabodhani | 19 | 36 | 1 | 0 | 52.78 |
Sophie Ecclestone | st Anushka Sanjeewani b Sugandika Kumari | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Linsey Smith | not out | 5 | 6 | 0 | 0 | 83.33 |
Lauren Bell | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 5 (b 1 , lb 1 , nb 0, w 3, pen 0) |
Total | 253/9 (50 Overs, RR: 5.06) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Udeshika Prabodhani | 9 | 0 | 55 | 2 | 6.11 | |
Sugandika Kumari | 10 | 0 | 66 | 2 | 6.60 | |
Chamari Athapaththu | 5 | 0 | 21 | 0 | 4.20 | |
Inoka Ranaweera | 10 | 1 | 33 | 3 | 3.30 | |
Dewmi Vihanga | 8 | 0 | 42 | 0 | 5.25 | |
Kavisha Dilhari | 8 | 0 | 34 | 1 | 4.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hasini Perera | c Alice Capsey b Sophie Ecclestone | 35 | 60 | 3 | 0 | 58.33 |
Chamari Athapaththu | b Sophie Ecclestone | 15 | 39 | 2 | 0 | 38.46 |
Vishmi Gunaratne | b Charlie Dean | 10 | 9 | 2 | 0 | 111.11 |
Harshitha Samarawickrama | c Lauren Bell b Sophie Ecclestone | 33 | 37 | 5 | 0 | 89.19 |
Kavisha Dilhari | b Sophie Ecclestone | 4 | 15 | 0 | 0 | 26.67 |
Nilakshika Silva | c Heather Knight b Alice Capsey | 23 | 38 | 2 | 0 | 60.53 |
Anushka Sanjeewani | lbw b Nat Sciver | 10 | 20 | 1 | 0 | 50.00 |
Dewmi Vihanga | c Charlie Dean b Nat Sciver | 3 | 15 | 0 | 0 | 20.00 |
Sugandika Kumari | b Charlie Dean | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Udeshika Prabodhani | c Katherine Brunt b Bryony Smith | 0 | 18 | 0 | 0 | 0.00 |
Inoka Ranaweera | not out | 3 | 15 | 0 | 0 | 20.00 |
Extras | 24 (b 0 , lb 6 , nb 0, w 18, pen 0) |
Total | 164/10 (45.4 Overs, RR: 3.59) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lauren Filer | 8 | 1 | 32 | 0 | 4.00 | |
Linsey Smith | 8.4 | 1 | 21 | 1 | 2.50 | |
Nat Sciver | 5 | 0 | 25 | 2 | 5.00 | |
Charlie Dean | 9 | 1 | 41 | 2 | 4.56 | |
Alice Capsey | 5 | 1 | 15 | 1 | 3.00 | |
Sophie Ecclestone | 10 | 3 | 17 | 4 | 1.70 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<