Home Tamil இங்கிலாந்து T20 மகளிர் அணிக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி

இங்கிலாந்து T20 மகளிர் அணிக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி

208

நேற்று (02) இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற மகளிர் T20I தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றில் முதல் தடவையாக, இங்கிலாந்து அணியினை T20I போட்டியொன்றில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

>> உள்ளூர் போட்டிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது SLC

T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆட இங்கிலாந்துக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக T20I தொடர் நடைபெற்று வருவதோடு இந்த தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்க இரண்டாவது T20I போட்டி நேற்று செல்ம்ஸ்போட் நகரில் ஆரம்பமாகியது

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து முதலில் இங்கிலாந்தை துடுப்பாடப் பணித்ததோடு, இங்கிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாடி 18 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 104 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்தது 

இங்கிலாந்து மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சார்லி டீன் 26 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களை எடுத்தார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் உதேசிகா ப்ரோபோதனி, இனோஷி பிரியதர்ஷினி, இனோக்கா ரணவீர மற்றும் கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 105 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி சாமரி அத்தபத்துவின் அதிரடி அரைச்சதத்தோடு போட்டியின் வெற்றி இலக்கை 13.2 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களுடன் அடைந்தது 

>> ஆசியக் கிண்ணத்துடன் கைகோர்க்கும் பி-லவ் கண்டி அணி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் 26 பந்துகளில் அரைச்சதம் பூர்த்தி செய்த இலங்கை மகளிர் அணித்தலைவி சாமரி அத்தபத்து 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஹர்சிதா சமரவிக்ரம 30 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பு வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார் 

இங்கிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சில் டேனியல் கிப்சன் மற்றும் அலிஸ் கேப்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்ட நாயகியாக இலங்கை மகளிர் அணித்தலைவி சாமரி அத்தபத்து தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது 

போட்டியின் சுருக்கம் 

Result


England Women
104/10 (18)

Sri Lanka Women
110/2 (13.2)

Batsmen R B 4s 6s SR
Danni Wyatt b Chamari Athapaththu 1 4 0 0 25.00
Maia Bouchier c Kavisha Dilhari b Inoshi Priyadarshani 12 10 2 0 120.00
Alice Capsey c Inoshi Priyadarshani b Kavisha Dilhari 3 9 0 0 33.33
Heather Knight b Inoka Ranaweera 14 16 2 0 87.50
Amy Jones lbw b Inoka Ranaweera 12 12 2 0 100.00
Freya Kemp st Anushka Sanjeewani b Kavisha Dilhari 2 2 0 0 100.00
Danielle Gibson c Inoka Ranaweera b Inoshi Priyadarshani 9 11 1 0 81.82
Charlie Dean b Udeshika Prabodhani 34 26 4 0 130.77
Sarah Glenn c Anushka Sanjeewani b Kavisha Dilhari 0 4 0 0 0.00
Issy Wong b Udeshika Prabodhani 13 12 1 0 108.33
Kate Cross not out 1 2 0 0 50.00


Extras 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 104/10 (18 Overs, RR: 5.78)
Bowling O M R W Econ
Chamari Athapaththu 3 0 11 1 3.67
Udeshika Prabodhani 3 0 19 2 6.33
Inoshi Priyadarshani 4 0 16 2 4.00
Sugandika Kumari 2 0 16 1 8.00
Inoka Ranaweera 3 0 25 2 8.33
Kavisha Dilhari 3 0 17 2 5.67


Batsmen R B 4s 6s SR
Chamari Athapaththu c Kate Cross b Alice Capsey 55 31 0 0 177.42
Anushka Sanjeewani c Charlie Dean b Danielle Gibson 1 4 0 0 25.00
Harshitha Samarawickrama not out 30 35 0 0 85.71
Vishmi Gunaratne not out 18 15 0 0 120.00


Extras 6 (b 0 , lb 0 , nb 5, w 1, pen 0)
Total 110/2 (13.2 Overs, RR: 8.25)
Fall of Wickets 1-3 (1) Harshitha Samarawickrama, 2-8 (2) Chamari Athapaththu,

Bowling O M R W Econ
Kate Cross 2.2 0 33 0 15.00
Danielle Gibson 1 0 9 1 9.00
Charlie Dean 2 0 19 0 9.50
Issy Wong 2 0 24 0 12.00
Sarah Glenn 3 0 11 0 3.67
Alice Capsey 3 0 14 1 4.67



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<