Home Tamil ஆறுதல் வெற்றியுடன் முக்கோண ஒருநாள் தொடரை நிறைவு செய்த தென்னாபிரிக்க மகளிர்

ஆறுதல் வெற்றியுடன் முக்கோண ஒருநாள் தொடரை நிறைவு செய்த தென்னாபிரிக்க மகளிர்

13
Sri Lanka vs South Africa - WODI Tri Series 2025 - Match 6

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை – தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் ஒருநாள் தொடரின் இறுதி லீக் போட்டியில் தென்னாபிரிக்கா 76 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

>>இலங்கை இளையோருடனான ஒருநாள் தொடரை வென்றது பங்களாதேஷ்<<

அதேநேரம் இந்த வெற்றியுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீராங்கனைகள் இந்த முக்கோண ஒருநாள் தொடரினை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளனர் 

முன்னதாக இந்த முக்கோண ஒருநாள் எந்த வெற்றிகளையும் பதிவு செய்யாத தென்னாபிரிக்க மகளிர் அணியினர், தொடரில் இரண்டு வெற்றிகளுடன் காணப்பட்டிருந்த இலங்கை வீராங்கனைகளை எதிர் கொண்டனர் 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீராங்கனைகள் முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை தென்னாபிரிக்காவிற்கு வழங்கினர். இதன்படி தென்னாபிரிக்க வீராங்கனைகள் முதலில் துடுப்பாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை எடுத்தனர்.   

>>PSL T20 தொடரினை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றிய பாகிஸ்தான்<<

தென்னாபிரிக்க துடுப்பாட்டம் சார்பில் அன்னெரி டேர்க்சன் அபார சதம் விளாசியதோடு வெறும் 84 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இவரது சதம் ஒரு கட்டத்தில் 126 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட தென்னாபிரிக்க அணியினர் 315 ஓட்டங்கள் பெறுவதற்கும் உதவியாக அமைந்தது. அதேநேரம் க்லோய் ட்ரையொன் 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை எடுத்தார் 

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் தேவ்மி விஹாங்கா 43 பந்துகளுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சாமரி அத்தபத்து 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 316 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை வீராங்கனைகள் 42.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவினர் 

இலங்கை மகளிர் அணி சார்பில் சாமரி அத்தபத்து 52 ஓட்டங்கள் எடுக்க, அனுஷ்க சஞ்சீவனி 43 ஓட்டங்கள் பெற்றார்தென்னாபிரிக்கப் பந்துவீச்சில் க்லோய் ட்ரையோன் 34 ஓட்டங்கள் மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சகலதுறை பிரகாசிப்புடன் தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகி விருதும் க்லோய் ட்ரையொனிற்கு வழங்கப்பட்டது. 

இந்த முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெறவுள்ளதோடு தொடரின் இறுதிப் போட்டியில் முன்னைய போட்டி முடிவுகளுடன் இலங்கைஇந்திய அணிகள் மோதவிருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka Women
239/10 (42.5)

South Africa Women
315/9 (50)

Batsmen R B 4s 6s SR
Laura Wolvaardt b Dewmi Vihanga 33 39 3 0 84.62
Tazmin Brits c Hasini Perera b Dewmi Vihanga 38 48 5 0 79.17
Lara Goodall c Hasini Perera b Dewmi Vihanga 2 8 0 0 25.00
Miane Smit c Manudi Nanayakkara b Dewmi Vihanga 8 13 1 0 61.54
Nondumiso Shangase lbw b Chamari Athapaththu 18 34 1 0 52.94
Sinalo Jafta b Dewmi Vihanga 0 2 0 0 0.00
Annerie Dercksen c Harshitha Samarawickrama b Manudi Nanayakkara 104 84 9 5 123.81
Chloe Tryon st Anushka Sanjeewani b Chamari Athapaththu 74 51 4 5 145.10
Nadine de Klerk not out 32 19 1 2 168.42
Seshnie Naidu run out (Chamari Athapaththu) 0 2 0 0 0.00
Ayabonga Khaka not out 0 0 0 0 0.00


Extras 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0)
Total 315/9 (50 Overs, RR: 6.3)
Bowling O M R W Econ
Malki Madara 7 0 59 0 8.43
Sugandika Kumari 10 0 57 0 5.70
Inoshi Priyadarshani 10 0 46 0 4.60
Dewmi Vihanga 9 0 43 5 4.78
Chamari Athapaththu 10 0 70 2 7.00
Manudi Nanayakkara 4 0 40 1 10.00


Batsmen R B 4s 6s SR
Hasini Perera c Annerie Dercksen b Chloe Tryon 30 26 5 0 115.38
Vishmi Gunaratne c Lara Goodall b Chloe Tryon 24 41 3 0 58.54
Harshitha Samarawickrama c Chloe Tryon b Seshnie Naidu 33 38 3 0 86.84
Chamari Athapaththu c Annerie Dercksen b Ayabonga Khaka 52 57 3 3 91.23
Nilakshika Silva b Ayabonga Khaka 14 20 1 0 70.00
Manudi Nanayakkara c Lara Goodall b Miane Smit 13 22 1 0 59.09
Anushka Sanjeewani not out 43 32 4 1 134.38
Dewmi Vihanga c Nadine de Klerk b Chloe Tryon 16 16 1 1 100.00
Sugandika Kumari c Nadine de Klerk b Chloe Tryon 0 1 0 0 0.00
Malki Madara c Sinalo Jafta b Chloe Tryon 0 1 0 0 0.00
Inoshi Priyadarshani run out (Sinalo Jafta) 0 3 0 0 0.00


Extras 14 (b 0 , lb 0 , nb 0, w 14, pen 0)
Total 239/10 (42.5 Overs, RR: 5.58)
Bowling O M R W Econ
Ayabonga Khaka 6 0 30 2 5.00
Nadine de Klerk 6 0 42 0 7.00
Annerie Dercksen 3.5 0 32 0 9.14
Chloe Tryon 8 1 34 5 4.25
Nondumiso Shangase 6 0 26 0 4.33
Seshnie Naidu 5 0 40 1 8.00
Miane Smit 8 0 35 1 4.38




 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<