2025 ஆசியக் கிண்ணத் தொடர் சுப்பர் 4 போட்டியில், இன்று (23) இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இந்த வெற்றி சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு முதல் வெற்றியாக மாற, இலங்கை வீரர்களுக்கு சுப்பர் 4 சுற்றில் இரண்டாவது தோல்வி என்பதனால் இலங்கைக்கு ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பும் கேள்விக் குறியாகியிருக்கின்றது.
பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான போட்டி முன்னதாக அபுதாபியில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாக். தலைவர் சல்மான் அகா இலங்கையை முதலில் துடுப்பாடப் பணித்தார்.
>> ILT20 மற்றும் Big Bash தொடர்களில் விளையாடவுள்ள அஸ்வின்
இலங்கை அணியானது ஆரம்ப வீரர்களான குசல் மெண்டிஸின் விக்கெட்டினை அவர் ஓட்டங்கள் பெறாத நிலையிலும், பெதும் நிஸ்ஸங்கவினை 8 ஓட்டங்கள் பெற்ற நிலையிலும் பறிகொடுத்தது. அதன் பின்னர் மத்திய வரிசை வீரர்களும் இலங்கைக்கு கைகொடுக்காத நிலையில் ஒரு கட்டத்தில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது.
எனினும் இந்த தருணத்தில் இலங்கை அணிக்கு கைகொடுத்த கமிந்து மெண்டிஸின் ஆட்டத்தினால், இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
இலங்கை துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் சஹீன் அப்ரிடி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஹரிஸ் ரவூப் மற்றும் மற்றும் ஹூசைன் தலாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 134 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணியானது இலங்கையின் சுழல் வீரர்கள் மூலம் தடுமாறிய போதும், 18 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கினை 5 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.
>> மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரை தவறவிடும் பாண்ட
பாகிஸ்தான் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த மொஹமட் நவாஸ் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் ஹூசைன் தலாட் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக ஹூசைன் தலாட் தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Pathum Nissanka | c Mohammad Haris b Shaheen Shah Afridi | 8 | 7 | 0 | 1 | 114.29 |
| Kusal Mendis | c Hussain Talat b Shaheen Shah Afridi | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Kusal Perera | c Faheem Ashraf b Haris Rauf | 15 | 12 | 1 | 1 | 125.00 |
| Charith Asalanka | c Haris Rauf b Hussain Talat | 20 | 19 | 2 | 1 | 105.26 |
| Kamindu Mendis | lbw b Shaheen Shah Afridi | 50 | 44 | 3 | 2 | 113.64 |
| Dasun Shanaka | c Mohammad Haris b Hussain Talat | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Wanindu Hasaranga | b Abrar Ahmed | 15 | 13 | 2 | 0 | 115.38 |
| Chamika Karunaratne | not out | 17 | 21 | 2 | 0 | 80.95 |
| Dushmantha Chameera | c Agha Salman b Haris Rauf | 1 | 2 | 0 | 0 | 50.00 |
| Maheesh Theekshana | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Extras | 7 (b 0 , lb 3 , nb 1, w 3, pen 0) |
| Total | 133/8 (20 Overs, RR: 6.65) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Shaheen Shah Afridi | 4 | 0 | 28 | 3 | 7.00 | |
| Faheem Ashraf | 4 | 0 | 34 | 0 | 8.50 | |
| Haris Rauf | 4 | 0 | 37 | 2 | 9.25 | |
| Agha Salman | 1 | 0 | 5 | 0 | 5.00 | |
| Hussain Talat | 3 | 0 | 18 | 2 | 6.00 | |
| Abrar Ahmed | 4 | 0 | 8 | 1 | 2.00 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Sahibzada Farhan | c Kamindu Mendis b Maheesh Theekshana | 24 | 15 | 1 | 2 | 160.00 |
| Fakhar Zaman | c Wanindu Hasaranga b Maheesh Theekshana | 17 | 19 | 1 | 0 | 89.47 |
| Saim Ayub | b Wanindu Hasaranga | 2 | 3 | 0 | 0 | 66.67 |
| Agha Salman | lbw b Wanindu Hasaranga | 5 | 6 | 0 | 0 | 83.33 |
| Hussain Talat | not out | 32 | 30 | 4 | 0 | 106.67 |
| Haris Rauf | b Dushmantha Chameera | 13 | 11 | 1 | 0 | 118.18 |
| Mohammad Nawaz | not out | 38 | 24 | 3 | 3 | 158.33 |
| Extras | 7 (b 4 , lb 1 , nb 0, w 2, pen 0) |
| Total | 138/5 (18 Overs, RR: 7.67) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Nuwan Thushara | 3 | 0 | 29 | 0 | 9.67 | |
| Dushmantha Chameera | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
| Maheesh Theekshana | 4 | 0 | 24 | 2 | 6.00 | |
| Wanindu Hasaranga | 4 | 0 | 27 | 2 | 6.75 | |
| Charith Asalanka | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
| Chamika Karunaratne | 1 | 0 | 11 | 0 | 11.00 | |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















