Home Tamil ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை நிறைவு செய்த இலங்கை

ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை நிறைவு செய்த இலங்கை

69
Sri Lanka vs Netherland

T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (17) தமது இறுதி லீக் போட்டியில் ஆடிய இலங்கை அணியானது அதில் நெதர்லாந்தினை 83 ஓட்டங்களால் ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.  

குழு D அணிகளில் ஒன்றான இலங்கை T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிய நிலையில் தொடர்ந்து முதல் வெற்றியினை எதிர்பார்த்து நெதர்லாந்தினை இன்று எதிர் கொண்டிருந்தது 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் நமீபியா வீரர்

குரோஸ் இஸ்லட் நகரில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார் 

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணியானது குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரது அதிரடியோடு 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை எடுத்தது 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க 21 பந்துகளில் 5 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரியோடு 46 ஓட்டங்கள் எடுக்க, குசல் மெண்டிஸ் 29 பந்துகளுக்கு 46 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் இறுதிநேர அதிரடியினை வெளிப்படுத்திய அஞ்செலோ மெதிவ்ஸ் 15 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். அணித்தலைவர் வனிந்து ஹஸரங்க 6 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 சிக்ஸர்களோடு 20 ஓட்டங்கள் பெற்றார். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் லோகன் வான் பீக் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார் 

தொடர்ந்து நெதர்லாந்து அணியானது போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 202 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடி 16.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது 

T20 உலகக் கிண்ணம் தொடர்பில் ட்ரென்ட் போல்டின் அறிவிப்பு

நெதர்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் மைக்கல் லேவிட் 31 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இலங்கை பந்துவீச்சில் நுவான் துஷார 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க வனிந்து ஹஸரங்க மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலன்க தெரிவாகியிருந்தார் 

போட்டியின் சுருக்கம் 

Result


Netherland
118/10 (16.4)

Sri Lanka
201/6 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Sybrand Engelbrecht b 0 2 0 0 0.00
Kusal Mendis c Sybrand Engelbrecht b Aryan Dutt 46 29 5 0 158.62
Kamindu Mendis c Logan van Beek b Paul van Meekeren 17 20 1 1 85.00
Dhananjaya de Silva c Bas de Leede b Tim Pringle 34 26 3 1 130.77
Charith Asalanka c Bas de Leede b Logan van Beek 46 21 1 2 219.05
Angelo Mathews not out 30 15 0 0 200.00
Dasun Shanaka c Scott Edwards b Logan van Beek 0 1 0 0 0.00
Wanidu Hasaranga not out 20 6 1 2 333.33


Extras 8 (b 0 , lb 0 , nb 0, w 8, pen 0)
Total 201/6 (20 Overs, RR: 10.05)
Bowling O M R W Econ
Pieter Seelaar 3 0 23 1 7.67
Aryan Dutt 3 0 23 1 7.67
Logan van Beek 4 0 45 2 11.25
Paul van Meekeren 3 0 37 1 12.33
Tim Pringle 4 0 41 1 10.25
Bas de Leede 3 0 32 0 10.67


Batsmen R B 4s 6s SR
Pieter Seelaar st Kusal Mendis b Maheesh Theekshana 31 23 2 3 134.78
Max O’Dowd c Kamindu Mendis b Nuwan Thushara 11 8 0 1 137.50
Vikramjit Singh c Kamindu Mendis b Dasun Shanaka 7 10 0 0 70.00
Sybrand Engelbrecht c Charith Asalanka b Matheesha Pathirana 11 9 0 1 122.22
Scott Edwards c Maheesh Theekshana b Nuwan Thushara 31 24 2 1 129.17
Bas de Leede c Charith Asalanka b Wanidu Hasaranga 3 5 0 0 60.00
Logan van Beek run out (Kusal Mendis) 0 1 0 0 0.00
Tim Pringle st Kusal Mendis b Wanidu Hasaranga 2 4 0 0 50.00
Aryan Dutt b Matheesha Pathirana 10 8 1 0 125.00
Paul van Meekeren lbw b Nuwan Thushara 3 8 0 0 37.50
Vikramjit Singh not out 1 1 0 0 100.00


Extras 8 (b 0 , lb 2 , nb 1, w 5, pen 0)
Total 118/10 (16.4 Overs, RR: 7.08)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 20 0 10.00
Nuwan Thushara 3.4 0 24 3 7.06
Maheesh Theekshana 3 0 25 1 8.33
Wanidu Hasaranga 4 0 25 2 6.25
Dasun Shanaka 1 0 10 1 10.00
Matheesha Pathirana 3 0 12 2 4.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<