Home Tamil 7 வருடங்களின் இந்தியாவினை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய மகளிர்

7 வருடங்களின் இந்தியாவினை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய மகளிர்

WODI Tri Series 2025 

15
WODI Tri Series 2025 

இந்திய – இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் முக்கோண ஒருநாள் தொடரில் இன்று (04) இந்தியாவினை இலங்கை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

இந்தியா, இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றின் மகளிர் கிரிக்கெட் அணிகள் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் விதத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மகளிர் முக்கோண ஒருநாள் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

>>முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி

இந்த ஒருநாள் தொடரில் தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா இன்று, தமது இறுதி மோதலில் தென்னாபிரிக்காவினை வீழ்த்திய இலங்கையினை எதிர் கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் இந்தியாவினை துடுப்பாடுமாறு பணித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.

இந்திய மகளிர் அணியின் சார்பில் ரிச்சா கோஸ் தன்னுடைய ஐந்தாவது ஒருநாள் அரைச்சதத்தோடு 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் பிரத்திகா ரவால் 35 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் சுகந்திகா குமாரி மற்றும் அணித்தலைவி சாமரி அத்தபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

>>இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 276 ஓட்டங்களை  அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை மகளிர் அணி குறித்த வெற்றி இலக்கினை 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

இலங்கை மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த வீராங்கனைகளில் அரைச்சதம் விளாசிய நிலக்ஷி டி சில்வா வெறும் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் பெற்றார். இது அவரது மூன்றாவது ஒருநாள் அரைச்சதமாகவும் மாறியது. மறுமுனையில் ஹர்சிதா சமரவிக்ரம இப்போட்டியில் 61 பந்துகளில் அரைச்சதம் பெற்று 53 ஓட்டங்கள் எடுத்து தொடரில் அடுத்தடுத்த அரைச்சதங்களை பதிவு செய்தார்.

இந்திய மகளிர் தரப்பின் பந்துவீச்சில் ஸ்னேஹ் ரனா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போராடிய போதும் அது வீணானது. போட்டியின் ஆட்டநாயகியாக நிலக்ஷி டி சில்வா தெரிவாகினார்.

இந்தப் போட்டியின் வெற்றியோடு இலங்கை மகளிர் அணியானது கடந்த 7 வருடங்களில் இந்திய மகளிர் அணிக்கு எதிராக முதன் முறையாக ஒருநாள் போட்டியொன்றில் வெற்றி பெற்றிருப்பதோடு அது இலங்கை இந்தியாவிற்கு எதிராக மகளிர் ஒருநாள் போட்டிகளில் பெற்ற மூன்றாவது வெற்றியாகவும் மாறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka Women
278/7 (49.1)

India Women
275/9 (50)

Batsmen R B 4s 6s SR
Pratika Rawal lbw b Inoka Ranaweera 35 39 3 1 89.74
Smriti Mandhana run out (Kavisha Dilhari) 18 28 3 0 64.29
Harleen Deol c Inoka Ranaweera b Dewmi Vihanga 29 35 4 0 82.86
Harmanpreet Kaur c Anushka Sanjeewani b Sugandika Kumari 30 45 3 0 66.67
Jemimah Rodrigues lbw b Chamari Athapaththu 37 46 3 0 80.43
Richa Ghosh c Malki Madara b Sugandika Kumari 58 48 5 3 120.83
Deepti Sharma lbw b Chamari Athapaththu 24 30 1 0 80.00
Kashvee Gautam c Vishmi Gunaratne b Chamari Athapaththu 17 11 3 0 154.55
Arundhati Reddy not out 9 11 0 0 81.82
Sneh Rana st Anushka Sanjeewani b Sugandika Kumari 10 9 1 0 111.11


Extras 8 (b 1 , lb 1 , nb 2, w 4, pen 0)
Total 275/9 (50 Overs, RR: 5.5)
Bowling O M R W Econ
Malki Madara 6 0 43 0 7.17
Sugandika Kumari 10 0 44 3 4.40
Dewmi Vihanga 10 0 54 1 5.40
Chamari Athapaththu 10 1 43 3 4.30
Inoka Ranaweera 8 0 42 1 5.25
Kavisha Dilhari 6 0 47 0 7.83


Batsmen R B 4s 6s SR
Hasini Perera run out (Deepti Sharma) 22 27 2 0 81.48
Vishmi Gunaratne c Amanjot Kaur b Arundhati Reddy 33 58 1 0 56.90
Harshitha Samarawickrama c Arundhati Reddy b Pratika Rawal 53 61 5 0 86.89
Chamari Athapaththu c Richa Ghosh b Sneh Rana 23 33 3 0 69.70
Kavisha Dilhari c Arundhati Reddy b Sneh Rana 35 32 5 0 109.38
Nilakshika Silva c Smriti Mandhana b Shree Charani 56 33 5 3 169.70
Dewmi Vihanga c Amanjot Kaur b Sneh Rana 1 3 0 0 33.33
Anushka Sanjeewani not out 23 28 2 0 82.14
Sugandika Kumari not out 19 20 2 0 95.00


Extras 13 (b 0 , lb 7 , nb 0, w 6, pen 0)
Total 278/7 (49.1 Overs, RR: 5.65)
Bowling O M R W Econ
Kashvee Gautam 5 1 23 0 4.60
Arundhati Reddy 9 0 55 1 6.11
Sneh Rana 10 0 45 3 4.50
Deepti Sharma 10 0 47 0 4.70
Pratika Rawal 5.1 0 32 1 6.27
Shree Charani 10 0 69 1 6.90



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<