Home Tamil ஹொங்கொங் வெற்றியுடன் சுப்பர் 4 வாய்ப்பை பலப்படுத்திய இலங்கை

ஹொங்கொங் வெற்றியுடன் சுப்பர் 4 வாய்ப்பை பலப்படுத்திய இலங்கை

34
Asia Cup 2025

இலங்கை – ஹொங்கொங் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஆசியக் கிண்ண தொடரின் குழுநிலை மோதலில் இலங்கை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

>>பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய அணி!

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது, 2025 ஆசியக் கிண்ண சுப்பர் 4 சுற்றுக்கு செல்லும் தமது வாய்ப்பினையும் அதிகரித்திருக்கின்றது.

துபாயில் முன்னர் ஆரம்பமாகிய இந்த போட்டியில், தமது முன்னைய மோதலில் பங்களாதேஷூடன் வெற்றியை சுவீகரித்த இலங்கை தமது முன்னைய மோதலில் பங்களாதேஷூடன் தோல்வியை தழுவிய ஹொங்கொங் அணியை எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஹொங்கொங் அணியினர் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்கள் பெற்றனர். ஹொங்கொங் துடுப்பாட்டத்தில் நிசாகட் கான் ஆட்டமிழக்காது 38 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 52 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் அன்சுமன் ராத் 46 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இலங்கைப் பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, வனிந்து ஹஸரங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

>>மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண நடுவர்கள் குழாத்தில் இரு இலங்கையர்கள்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 150 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க சிறந்த ஆரம்பத்தினை வழங்கினார். அவர் இப்போட்டியில் 44 பந்துகளை முகம் கொண்டு 2 சிக்ஸர்கள் 4 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் பெற்றார்.

பெதும் நிஸ்ஸங்கவின் ஆட்டமிழப்பின் பின்னர் குறுகிய இடைவெளிகளில் இலங்கைத் தரப்பானது விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் இறுதியில் 18.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கினை எட்டியது.

இலங்கை அணியின் வெற்றியினை இறுதிவரை ஆட்டமிழக்காது உறுதி செய்த வனிந்து ஹஸரங்க 9 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 20 ஓட்டங்கள் பெற்றார்.

ஹொங்கொங் பந்துவீச்சில் இலங்கைக்கு நெருக்கடி வழங்கிய யாசிம் முர்தஷா 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஆயுஷ் சுக்லா, எஹ்சான் கான் மற்றும் அய்சாஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார். இலங்கை ஆசியக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக ஆப்கானை வியாழன் (18) எதிர்கொள்கின்றது.

Result


Hong Kong
149/4 (20)

Sri Lanka
153/6 (18.5)

Batsmen R B 4s 6s SR
Zeeshan Ali c Kusal Mendis b Dushmantha Chameera 23 17 2 0 135.29
Anshy Rath c Kamindu Mendis b Dushmantha Chameera 48 46 4 0 104.35
Babar Hayat st Kusal Mendis b Wanindu Hasaranga 4 10 0 0 40.00
Nizakat Khan not out 52 38 4 2 136.84
Yasim Murtaza c Dushmantha Chameera b Dasun Shanaka 5 4 1 0 125.00
Aizaz Khan not out 4 6 0 0 66.67


Extras 13 (b 1 , lb 7 , nb 1, w 4, pen 0)
Total 149/4 (20 Overs, RR: 7.45)
Bowling O M R W Econ
Nuwan Thushara 4 0 36 0 9.00
Dushmantha Chameera 4 0 29 2 7.25
Maheesh Theekshana 4 0 22 0 5.50
Wanindu Hasaranga 4 0 27 1 6.75
Charith Asalanka 3 0 22 0 7.33
Dasun Shanaka 1 0 5 1 5.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka run out (Yasim Murtaza) 68 44 6 2 154.55
Kusal Mendis c Anshuman Rath b Ayush Shukla 11 14 2 0 78.57
Kamil Mishara  c Babar Hayat b Aizaz Khan 19 18 1 1 105.56
Kusal Perera lbw b Yasim Murtaza 20 16 1 1 125.00
Dasun Shanaka not out 6 3 1 0 200.00
Charith Asalanka c Ayush Shukla b Ehsan Khan 2 5 0 0 40.00
Kamindu Mendis c Babar Hayat b Yasim Murtaza 5 5 0 0 100.00
Wanindu Hasaranga not out 20 9 2 1 222.22


Extras 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 153/6 (18.5 Overs, RR: 8.12)
Bowling O M R W Econ
Yasim Murtaza 4 0 37 2 9.25
Ayush Shukla 3 0 30 1 10.00
Ateeq Iqbal 2.5 0 18 0 7.20
Ehsan Khan 4 0 25 1 6.25
Kinchit Shah 2 0 15 0 7.50
Aizaz Khan 3 0 27 1 9.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<