இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பறியுள்ளது.
விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ள இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய
இங்கிலாந்து அணி நிர்ணயித்திருந்த 301 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவின் போது, 226 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டநேரத்தை தொடர்ந்த இலங்கை அணி மேலதிகமாக வெறும் 17 ஓட்டங்களை பெற்றநிலையில், 243 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தொடர் தோல்வியை தழுவியது.
இன்றைய தினத்தை பொருத்தவரை நிரோஷன் டிக்வெல்ல 35 ஓட்டங்களையும், அகில தனன்ஜய 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, இங்கிலாந்து அணிசார்பில் மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும், ஜெக் லீச் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
முழுமையாக இந்த டெஸ்ட் போட்டியை நோக்கும் போது, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தங்களுடைய முதல் இன்னிங்ஸில், நடுவர்களால் வழங்கப்பட்ட மேலதிக 5 ஓட்டங்களுடன் 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் செம் கரன் 64 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 63 ஓட்டங்களையும் பெற, டில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும், மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
“46 ஓட்டங்கள் முன்னிலையானது அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” – திமுத் கருணாரத்ன
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய
தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ரொஷேன் சில்வா, திமுத் கருணாரத்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 336 ஓட்டங்களை விளாசி 46 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றது. இறுதிவரை போராடிய ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 63 ஓட்டங்களையும் பெற்றதுடன், தனன்ஜய டி சில்வா 59 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஜெக் லீச் மற்றும் ஆதில் ரஷீட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து, 46 ஓட்டங்கள் பின்னடைவில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அற்புதமான சதம் மற்றும் ரோரி பேர்ன்ஸ், பென் போக்ஸின் அரைச்சததங்களின் உதவியுடன் 346 ஓட்டங்களை குவித்து, இலங்கை அணிக்கு 301 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயி்த்திருந்தது. ஜோ ரூட் 124 ஓட்டங்களையும், ரோரி பேர்ன்ஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பென் போக்ஸ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
Photos: Sri Lanka Vs England | 2nd Test – (Day 04)
ThePapare.com | Waruna Lakmal | 17/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be considered an intended
பந்து வீச்சில் அகில தனன்ஜய 6 விக்கெட்டுளையும், டில்ருவான் பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய ஜோ ரூட் தெரிவானார்.
இதேவைளை, இந்த டெஸ்ட் தொடர் வெற்றியானது 2000-01ம் ஆண்டுகளுக்கு பின்னர், இங்கிலாந்து அணி, இலங்கையில் பெறும் முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியாக பதிவாகியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
போட்டி சுருக்கம் –
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க