Home Tamil வெற்றியுடன் ஆசியக் கிண்ணத் தொடரினை ஆரம்பித்த இலங்கை

வெற்றியுடன் ஆசியக் கிண்ணத் தொடரினை ஆரம்பித்த இலங்கை

Asia Cup 2025

36

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் இலங்கை விக்கெட்டுக்களால் பங்களாதேஷை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளதோடு, தொடரினையும் வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. 

அபுதாபியில் குழு B அணிகளான இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி முன்னதாக ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பாடும் வாய்ப்பை பங்களாதேஷிற்கு வழங்கினார். 

>> இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடர்: கேசவ் மகாராஜ் விலகல்

துடுப்பாட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் அணி, போட்டியின் முதலிரண்டு ஓவர்களிலும் தடுமாறியது. அதன் பின்னர் அவ்வணியின் முன்வரிசை வீரர்களும் ஏமாற்ற ஒரு கட்டத்தில் அவ்வணி 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து இக்கட்டான நிலைக்குச் சென்றது. 

எனினும் இந்த தருணத்தில் அவ்வணிக்கு ஜாகேர் அலி, ஷமிம் ஹொசைன் ஆகியோர் நிதான இணைப்பாட்டம் ஒன்றை வழங்கினர். இரு வீரர்களும் பங்களாதேஷ் அணிக்காக 86 ஓட்டங்களை பகிர பங்களாதேஷ் தரப்பானது, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது. 

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஜாகேர் அலி 34 பந்துகளில் 2 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுக்க, ஷமிம் ஹொசைன் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் 3 பெளண்டரிகளோடு 42 ஓட்டங்களை எடுத்தார். 

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும், துஷ்மன்த சமீர மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர் 

>> இலங்கை மகளிர் கிரிக்கெட்டுடன் இணையும் டேவிட் பூன்!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 140 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது, தொடக்கத்தில் சிறு தடுமாற்றம் ஒன்றை கண்ட போதிலும் பெதும் நிஸ்ஸங்க மற்றும் கமில் மிஷார ஆகியோரது அதிரடியோடு போட்டியின் வெற்றி இலக்கை வெறும் 14.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களுடன் அடைந்தது 

போட்டியின் வெற்றி இலக்கினை அடைய இலங்கைக்கு உதவியாக அமைந்த பெதும் நிஸ்ஸங்க 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுக்க, கமில் மிஷார ஆட்டமிழக்காது 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுத்தார் 

பங்களாதேஷ் பந்துவீச்சில் மஹேதி ஹஸன் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக கமில் மிஷார தெரிவாகினார் 

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
139/5 (20)

Sri Lanka
140/4 (14.4)

Batsmen R B 4s 6s SR
Tanzid Hasan b Nuwan Thushara 0 6 0 0 0.00
Parvez Hossain Emon c Kusal Mendis b Dushmantha Chameera 0 4 0 0 0.00
Liton Das c Kusal Mendis b Wanindu Hasaranga 28 26 4 0 107.69
Towhid Hridoy run out (Kamil Mishara ) 8 9 0 0 88.89
Mehidy Hasan Miraz lbw b Wanindu Hasaranga 9 7 1 0 128.57
Jaker Ali not out 41 34 2 0 120.59
Shamim Hossain not out 42 34 3 1 123.53


Extras 11 (b 2 , lb 3 , nb 0, w 6, pen 0)
Total 139/5 (20 Overs, RR: 6.95)
Bowling O M R W Econ
Nuwan Thushara 4 1 17 1 4.25
Dushmantha Chameera 4 1 17 1 4.25
Dasun Shanaka 3 0 27 0 9.00
Matheesha Pathirana 4 0 42 0 10.50
Wanindu Hasaranga 4 0 25 2 6.25
Charith Asalanka 1 0 6 0 6.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Shoriful Islam b Mahedi Hasan 50 34 6 1 147.06
Kusal Mendis c Liton Das b Mustafizur Rahman 3 6 0 0 50.00
Kamil Mishara  not out 46 32 4 2 143.75
Kusal Perera lbw b Mehidy Hasan Miraz 9 9 1 0 100.00
Dasun Shanaka c Mustafizur Rahman b Tanzim Hasan Sakib 1 3 0 0 33.33
Charith Asalanka not out 10 4 0 1 250.00


Extras 21 (b 0 , lb 5 , nb 0, w 16, pen 0)
Total 140/4 (14.4 Overs, RR: 9.55)
Bowling O M R W Econ
Shoriful Islam 3 0 26 0 8.67
Mustafizur Rahman 3 0 35 1 11.67
Tanzim Hasan Sakib 3 0 23 1 7.67
Mahedi Hasan 4 0 29 2 7.25
Rishad Hossain 1 0 18 0 18.00
Shamim Hossain 0.4 0 4 0 10.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<