Home Tamil தோல்வியுறாத அணியாக சுப்பர் 4 சுற்றிற்கு செல்லும் இலங்கை வீரர்கள்

தோல்வியுறாத அணியாக சுப்பர் 4 சுற்றிற்கு செல்லும் இலங்கை வீரர்கள்

Asia Cup 2025

32
Sri Lanka vs Afghanistan

அபுதாபியில் நடைபெற்று முடிந்திருக்கும், ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆசியக் கிண்ணத் தொடர் குழுநிலை மோதலில் இலங்கை 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

>> புதிய T20I வீரர்கள் வரிசையில் இலங்கை அணியின் வீரர்கள் முன்னேற்றம்

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது 2025ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடர் சுப்பர் 4 சுற்றுக்கும் தோல்வியுறாத நிலையில் தெரிவாகியுள்ளது 

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கான் தலைவர் ரஷீட் கான் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆப்கான் வீரர்கள் நுவான் துஷாரவின் பந்துவீச்சில் தடுமாறினர். ஒரு கட்டத்தில் 79 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய ஆப்கான் அணிக்கு, 7ஆம் விக்கெட்டின் நிதானம் கலந்த அதிரடியோடு செயற்பட்ட மொஹமட் நபி முதல் இன்னிங்ஸின் இறுதி ஓவரில் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில், தொடர்ந்து 5 சிக்ஸர்களை விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது 

ஆப்கானிஸ்தான் தரப்பின் துடுப்பாட்டத்தில் மொஹமட் நபி 20 பந்துகளில் அரைச்சதம் விளாசியதோடு, அவர் மொத்தமாக 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார் 

>> ICC இடம் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை நிராகரிப்பா?

இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் துஷார 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க துஷ்மன்த சமீர, துனித் வெல்லாலகே மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 170 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது ஆரம்பத்தில் சில விக்கெட்டுக்களை இழந்த போதும் குசல் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தினால் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கினை எட்டியது 

இலங்கை தரப்பின் வெற்றியினை உறுதி செய்த குசல் மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காது தன்னுடைய 17ஆவது T20I அரைச்சதத்துடன் 52 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் பெற்றார் 

ஆப்கான் பந்துவீச்சில் முஜிபுர் ரஹ்மான், அஷ்மத்துல்லா ஒமர்சாய், மொஹமட் நபி மற்றும் நூர் அஹ்மட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார் 

போட்டியின் சுருக்கம்

Result


Afghanistan
169/7 (20)

Sri Lanka
171/4 (18.4)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Kusal Perera b Nuwan Thushara 14 8 2 0 175.00
Sediqullah Atal b Nuwan Thushara 18 14 2 1 128.57
Karim Janat b Nuwan Thushara 1 3 0 0 33.33
Ibrahim Zadran c Dushmantha Chameera b Dunith Wellalage 24 27 0 1 88.89
Darwish Rasooli c Kusal Perera b Dushmantha Chameera 9 15 0 0 60.00
Azmatullah Omarzai b Dasun Shanaka 6 4 1 0 150.00
Mohammad Nabi not out 60 22 3 6 272.73
Rashid Khan b Nuwan Thushara 24 23 2 1 104.35
Noor Ahmad not out 6 4 0 0 150.00


Extras 7 (b 0 , lb 5 , nb 1, w 1, pen 0)
Total 169/7 (20 Overs, RR: 8.45)
Bowling O M R W Econ
Nuwan Thushara 4 0 18 4 4.50
Dushmantha Chameera 4 0 50 1 12.50
Dunith Wellalage 4 0 49 1 12.25
Dasun Shanaka 4 0 29 1 7.25
Wanindu Hasaranga 4 0 18 0 4.50


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Mujeeb ur Rahman b Azmatullah Omarzai 6 5 1 0 120.00
Kusal Mendis not out 74 52 10 0 142.31
Kamil Mishara  c Ibrahim Zadran b Mohammad Nabi 4 10 0 0 40.00
Kusal Perera c Rahmanullah Gurbaz b Mujeeb ur Rahman 28 20 3 0 140.00
Charith Asalanka c Rashid Khan b Noor Ahmad 17 12 2 0 141.67
Kamindu Mendis not out 26 13 0 2 200.00


Extras 16 (b 0 , lb 1 , nb 0, w 15, pen 0)
Total 171/4 (18.4 Overs, RR: 9.16)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 3 0 38 0 12.67
Mujeeb ur Rahman 3.4 0 42 1 12.35
Azmatullah Omarzai 2 0 10 1 5.00
Mohammad Nabi 3 0 20 1 6.67
Rashid Khan 4 0 23 0 5.75
Noor Ahmad 3 0 37 1 12.33



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<